CM Jayalalithaa plan to visit Delta districts | டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிட திட்டம் : வறட்சியால் நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (15)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட, முதல்வர் ஜெ., டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் அதிகாரிகள், திடீர் சுறுசுறுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இப்பகுதியை பார்வையிடும் போது, அதிக இழப்புகளில் நொந்த விவசாயிகளுக்கு, பலன் தரும் விதத்தில் உதவிகளை அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், காலம் தாழ்த்தியே சம்பா சாகுபடியும் துவங்கியது.தற்போது, 11 லட்சம் ஏக்கரில், இம்மாவட்டங்களில் சம்பா சாகுபடி நடந்துள்ளது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால், சாகுபடி செய்த சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.விவசாயம் பாதித்ததால் விரக்தி அடைந்த ஐந்து விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டனர். பயிர்களை காக்க, தெளிப்பு நீர்பாசனம் உள்ளிட்ட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; அதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதே சமயம், பயிர்கள் முற்றிலும் பாதிக்கும் பட்சத்தில், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை, வறட்சி மாவட்டமாகஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. காவிரியில்

இருந்து தண்ணீர் வழங்க, நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. பார்லிமென்ட், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.தி.மு.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களை, வறட்சி மாவட்டமாக அறிவிக்கலாமா என்பது குறித்து அறிவிக்க, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஏக்கருக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை, குறைந்த பட்சம் இழப்பை சந்தித்த விவசாயிகள், மீள்வது சுலபம் அல்ல. வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களை பார்வையிட முதல்வர் ஜெ., விரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு, பயணம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிர்கள் பாதிப்பால், சோகத்தில் மூழ்கி கிடக்கும் டெல்டா விவசாயிகளுக்கு, முதல்வரின் வருகை

Advertisement

குறித்த தகவல், சற்று ஆறுதலை தந்துள்ளது.
முதல்வர் வருகையால், தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெ., வருகை குறித்த தகவலால், டெல்டா மாவட்டத்தில் உள்ள பொதுப்பணி, வேளாண், வருவாய் துறைகளின் அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். விவசாயம், விவசாயிகள் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
19-டிச-201205:50:04 IST Report Abuse
Aboobacker Siddeeq மழை (நீர்) பொய்த்து போகும் காலம் எல்லாம் நடைபெறும் ஒரு நிகழ்வு இது... எப்போதும் இயற்கையையே நம்பி விவசாயம் டெல்டா மாவட்டங்களில் நடை பெற்று வருகிறது... இதற்கு இழப்பு அளித்தால் மட்டும் தீர்வு ஏற்படப்போவதில்லை... ஏதேனும் நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்... விவசாயம் மட்டுமே டெல்டா மாவட்ட மக்களின் தொழில்.. அதனை முன்னேற்றமடைய செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.. உரிய பாசன வசதிக்கு நிரந்தர தீர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.. ஒவ்வொரு முறையும் குறுவை சாகுபடிக்கும் சம்பா சாகுபடிக்கும் கர்நாடகம் மூலம் காவேரி நீரை எதிர்பார்ப்பது இனி மேலும் முட்டாள்தனம்.. தன் கையே தனக்குதவி என்பது போல் இறைவன் கொடுக்கும் சிறிய மழையையும் உரிய முறையில் சேகரித்து உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்தால் மிகவும் சிறப்பாக அமையும்... அரசாங்கம் உரிய நடவிடிக்கை எடுக்குமா? அல்லது சிரமம் ஏற்ப்படும் போது மட்டும் நிவாரணம் என்கிற பெயரில் ஒரு சில விவசாயிகள் மட்டும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிவாரணமாக பெறுகிறார்கள். இதிலும் அரசியல் பல வழிகளில் விளையாடியும் அதிகாரிகள் சுருட்டியும் எஞ்சி கிடைப்பது ஒரு சிறு தொகையே... மகசூலை விதைத்தவர் அறுவடையை இழந்ததோடு நாட்டுக்கும் பேரிழப்பு... அரசாங்கம் உரிய, சீரிய, தொலைநோக்கு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.... வாழ்க விவசாயம் வளர்க இவ்வையகம்...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-டிச-201204:48:56 IST Report Abuse
villupuram jeevithan பயணத்தை தெரிந்து கொண்டு நேற்றே கேட்டுவிட்டார், .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-டிச-201204:47:42 IST Report Abuse
villupuram jeevithan திகாருக்கு சென்று வந்ததை பாராட்டும் சிலர் இதிலும் குறை சொல்லப் போகிறார்கள், விடுங்கள். அவர்கள் இயல்பை மாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:15:45 IST Report Abuse
தமிழ்வேல் தாத்தா வுக்கு ராசியான நல்ல வாய் .... அவரு சொன்னா சரியா நடக்குது பாத்தீங்களா ?....நான் நேற்று சொன்னாபோல // தாத்தா சொல்லிட்டார்ல...? அம்மா ரெண்டு பங்கு செய்வார்...//
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
19-டிச-201202:29:34 IST Report Abuse
Sekar Sekaran விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள முதல்வரின் விஜயம்..பொய்த்துப்போன மழையில் வாடும் உள்ளங்களுக்கு கருணை உள்ளத்தோடு கண்டிப்பாய் நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார். 1972 களில் ஆட்சி புரிந்த கருணாவின் ஆட்சி போல் அல்லாமல்..செயற்கை மழை பெய்விக்க ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பொடி தூவுகின்றேன் என்று சொல்லி ஏமாற்றி அதிலேகூட ஊழல் செய்த உள்ளத்தை போல் அல்லாமல்..சொந்த மனைவி பேரில்..தாயின் பேரில் "உளுத்தம்பருப்பு" அரிசிக்கு கூட தங்களது பெயரை சூட்டி மகிழ்ந்த கல்நெஞ்சம் போல் அல்லாமல்..அம்மாவின் விஜயம் தாயுள்ளம் போல கருணை செய்வார்கள்..அரிசியில் ஊழல் செய்தவர்கள்..விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களில் கூட "ஊழல்" செய்து பணம் பண்ணிய முதல்வர் இருந்த பழைய தமிழகம் போல் அல்ல..இன்றைக்கு போராடி நீர் பெற்று தந்தார்..விஜயம் செய்து அருமையான அறிவிப்பை நெஞ்சில் பால் வார்க்க வருகின்றார். மாறுபட்ட முதல்வர்..தனக்கென வாழா..தாரணி போற்றும் முதல்வர்..அம்மா என்கிற தாயுள்ளத்தோடு வரும்போது...பலருக்கும் பாவிகளுக்கும் பதைபதைக்கும்..வீண் பழி சொல்லி குடல் கருக விமர்சிப்பார்கள்..டெல்டா விவசாயிகளின் நலன் காக்கும் நல்ல முதல்வர்..விவசாயிகள் அறிவார்கள்..வீணர்கள் பற்றி கவலை இல்லை..
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-டிச-201201:11:43 IST Report Abuse
NavaMayam விவசாயிகள் படிக்கபட்டுள்ளார்கள் என்று தெரிந்தவுடனேயே அந்த பகுதி அதிகாரிகள் தானே சுறுசுருப்ப்பு அடைய வேண்டாமா ... முதல்வர் வருகிறார் என்றவுடன் தான் சுறுசுறுப்பு அடைய வேண்டுமா...விவசாய மந்திரி , அந்த தொகுதி எம் எல் ஏக்கள் எல்லாம் என் அவர்களை சுறுசுறுப்பாக வில்லை ... எல்லாமே அம்மா என்றால் , மக்கள் அம்போ தான் ...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:26:29 IST Report Abuse
தமிழ்வேல் // எல்லாமே அம்மா என்றால் , மக்கள் அம்போ தான் ...// சம்பா போல .....
Rate this:
Share this comment
Cancel
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
19-டிச-201201:09:59 IST Report Abuse
Amalraj Penigilapati சென்னை மாநகரில் ஹெலிகாப்டரில் பறந்து குப்பைகளை பார்வையிட்டாங்களே, அதனோட முடிவு எப்ப வரும்?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:24:44 IST Report Abuse
தமிழ்வேல் அதுவும் குப்பைக்கு போயிட்டுதோ ? அதை வைத்து தான் சைதை.... ஒரேமாதத்தில் குப்பை இல்லா மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினாரே அது போதாது உங்களுக்கு ? அம்மா கரண்டுக்கு மூன்மாசம்னு சொன்னா .... இவரு குப்பைக்கு ஒரு மாசம் போதும்னு சொல்றாரு.....
Rate this:
Share this comment
Cancel
19-டிச-201200:55:09 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... விவசாயிகளின் துயர்துடைப்பதில் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:21:22 IST Report Abuse
தமிழ்வேல் நமது நல்ல வேலை.. இவரைப்போல இன்னொருவர் இல்லாமல் போனது........
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
19-டிச-201200:38:19 IST Report Abuse
Thangairaja டெல்டா மாவட்டத்தில் உள்ள பொதுப்பணி, வேளாண், வருவாய் துறைகளின் அதிகாரிகள் ஏன் திடீர் சுறுசுறுப்பு அடைய வேண்டும் .? முதல்வர் வந்து இவர்களையா பார்க்க போகிறார். ஹெலிகாப்டரிளிருந்தவாறே ஒரு ரவுண்ட் அடித்து விட்டு போவதற்கு ஏன் இத்தனை பில்ட் அப் .....எப்படியோ, கலைஞர் நிவாரணம் கொடுக்க வேண்டுமென்று அறிக்கை விட்டதுடன் திமுக எம்பிக்களை பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்ததற்கு கிடைக்க போகும் நன்மையாக விவசாயிகளின் துயருக்கு ஆறுதலாக பயணம் அமையட்டும். .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:20:32 IST Report Abuse
தமிழ்வேல் சென்றமுறை கடலூரில் எலிகாப்டரை விட்டு இறங்காமலே சுற்றிப்பார்த்துவிட்டு சென்று விட்டார் என்று கூறினார்களே... இந்த தடவை எங்காவது ஒரு இடத்தில் காலை பாதிப்பதாக கூறி இருப்பார் ... அதனால்... எல்லாம் சுத்தம் செய்யப்படுகின்றதோ ?...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-டிச-201200:38:08 IST Report Abuse
மதுரை விருமாண்டி நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா ?? வராது... அரசாங்கக் கணக்குலே, தனி விமானச் செலவு, அல்லக்கை மந்திரிகள் புடை சூழ வரவேற்ற செலவு, ஆயாம்மாவுக்கு தனி A.C கக்கூஸ் கட்டின செலவுன்னு ஒரு நாலு ஐந்து கோடி விரயம் தான் ஆகும்... அந்த பணத்தை விவசாயிகளுக்காக கஞ்சித் தொட்டி கட்டி ஒரு வேளை கஞ்சி விட்டோ, அல்லது சிறு விவசாயிகளுக்கு கடனை ரத்து செய்யவோ செலேவு செய்ய அதை பயன் படுத்திக் கொள்ளலாம்.. ஸ்ரீரங்கத்தில் பட்டுச் சேலை கட்டிக் கொண்டு வருபவர்கள் வெட்டி சோறு திங்க கோவில் பணத்தை செலவிடுவதை திருப்பி, இங்கே மானத்தை மறைக்க துணி கட்டி, வானத்தை பார்த்து வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கிட்டும் இருக்காளே கருப்பி ஒருத்தி.. அவள் குடும்பத்துக்கு செலேவு செய்ய சொல்லுங்கள்.. அங்கே அவகளுக்கு போடுவதை, இங்கே இவகளுக்கு போடுங்கள்.. புண்ணியம் பெருகும்... மழை விழும்..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-டிச-201203:17:59 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை -// ஸ்ரீரங்கத்தில் பட்டுச் சேலை கட்டிக் கொண்டு வருபவர்கள் வெட்டி சோறு திங்க // போட்டோவை பார்த்தேன் ... அதுவும் சரியான கட்டமைப்பு இல்லாமல் பாதி உணவை கீழே கொட்டுகின்றார்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.