சென்னை :"" சிறையில் அடைக்கும் அரசு செயலுக்கு தி.மு.க.,வினர் பயப்பட மாட்டார்கள் ,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
மின்வெட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், பேசிய முதல்வர் ஜெயலலிதா, "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவுகிறது' என, கூறியிருக்கிறார்.இந்த அரசு பதவியேற்றது முதல், இதுவரையில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள், 928; கொள்ளைகள், 768; செயின் பறிப்புகள், 476; வழிப்பறி மோசடிகள், 480.
தமிழகத்திலே உள்ள மின் விளக்குகளையெல்லாம் அணைத்து, தமிழகத்தை இருள் ஆக்கி, அந்த இருளில், கள்வர்கள் தங்களுடைய, கைவரிசையைக் காட்டுவதற்கு, வழி வகுக்கப்பட்டுள்ளது. இடித்துச் சொல்வதற்கு, எதிர்க்கட்சியோ, நண்பர்களோ இல்லாத மன்னன், அவனது அரசு, கெடுப்பவர்கள் இல்லாமலேயே கெட்டு ஒழிந்து விடும். அதை மனதிலே கொண்டு, இந்த ஆட்சி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.தி.மு.க., வினர் மீது, குற்றப்பரம்பரை காலத்தில், போடப்பட்ட பழைய சட்டப்பிரிவுகளை எல்லாம், இன்றைக்குப் பயன்படுத்தி, குண்டர் சட்டத்தில் சிறையிலே அடைக்கின்றனர். சிறைக்குச் சிறை மாற்றுகின்றனர். இதற்கெல்லாம், தி.மு.க.,வினர் பயப்பட மாட்டார்கள்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"இடித்துச் சொல்வதற்கு, எதிர்க்கட்சியோ, நண்பர்களோ இல்லாத மன்னன், அவனது அரசு, கெடுப்பவர்கள் இல்லாமலேயே கெட்டு ஒழிந்து விடும்".. .. சரியா சொன்னீங்க தலைவா... சபை ஆரமிச்சதும், அலறி அடிச்சுண்டு, ஏதாவது காரணம் சொல்லி உங்க ஆளுங்க வெளி நடப்பு செய்யறாங்க... உச்சா போக விடமாட்டேங்கறாங்க என்ற காரணம் மட்டும் இன்னும் சொல்லவில்லை... இன்னொருத்தரோ, நாக்கை மடக்கி, கையை நீட்டி சவால் விடறாரு.. அந்தம்மாவும் எதிர் சவால் விட்டு, ஜெயிச்சும் காமிக்கறாங்க... அதனால அவரு சட்டசபை பக்கமே போறதில்ல... உங்களுக்கோ... சக்கர நாற்காலி போக முடியலேன்னு சொல்லி கையெழுத்து மட்டும் போட்டு, சம்பளமும், படிகளும் வாங்கிட்டு போயிடறீங்க [உங்க ஆட்சியில், நீங்க இதே சட்டசபைக்கு வந்தீங்கன்னு ஞாபகம் இருக்குதா?].. இன்னொரு கட்சியோ, அதுல தலைவர் யாரு தொண்டர் யாருன்னு தெரியாம, திண்டாடிண்டு இருக்கிறாங்க... இப்படி இருக்கறச்சே... ஆட்சியின் குறைகளை சொல்ல யாரு இருக்காங்க?
ஆமாம் இப்போதுதான் அங்கு சாமானியர்களுக்குக்கூட அதிக வசதி செய்து தரப்படுகிறதே? ஆனாலும் நீங்கள் பயப்பட மாட்டோம் ( அதென்ன மாட்டோம் மாட்டேன் என்று தைரியமிருந்தால் கூற வேண்டியதுதானே? ) என்று சொல்வதற்கு காரணம் புரிகிறது. பில்டிங் ஸ்ட்ராங்.... பேஸ்மென்ட் வீக்.... அதானே? கைது படலம் வரும்போது தான் ஒரு படையே வந்து டீம் வொர்க் செய்யுமே? ( ஆக்டிங், டப்பிங், போலீசையே மிரட்டலிங் இன்னபிற.. ) ஹையோ.... ஹைய்யோ....
பேசி பேசியே அடிமட்ட அப்பாவி தொண்டனை உசுப்பேத்தி அரசியல் செய்யார்திகள்.. உங்களிடம் இருந்த விசுவாசம் உள்ள வைகோவை கொலைபழி சுமத்தி வெளியே அனுப்பினீர்கள்..எதற்காக உங்கள் குடும்பத்திற்காக, நயவஞ்சக பேச்சும் உங்கள் நாடகமும் இலங்கையில் அப்பாவி மக்களை அந்த அரசாங்கம் கொன்று குவித்த போது வெளிப்பட்டு விட்டது...இந்த துரோக செயல் வரலாற்றில் இடம் பெற்று உங்களை தமிழின துரோகியாக என்றும் சித்தரிக்கும்...
ஐயோ கொல்றாங்களே, குத்துரான்களே, வெட்ரான்களே என்னை காப்பாற்ற யாரும் இல்லையா, இந்த வயசான காலத்தில் எனக்கு பிரதமர் பதவி கொடுக்காமல் இப்படி மேம்பால வூழலுக்காக இம்சை பண்ணி சித்தரவதை செய்றாங்களே, சர்காரியாவே என் வூழலை கண்டு வி்ஞ்ஞான வூழல் என சர்டிபிகட் கொடுத்தாரே ,அதை வைத்துக்கொண்டுதானே 2 g புகழ் வூழல் செய்ய முடிந்தது. அதனால நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கழக உறுப்பினருக்கு நன்கு புரியும். உள்ளே போனால் தொண்டன் இல்லையேல் சண்டன் ,கண்ணா லட்டு தின்ன ஆசையா,ரெண்டு லட்டு தின்ன ஆசையா,( களிதான் உன்கதி அடித்தவரை போதும் தொட்டனை வாழவிடுங்கள் )

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.