11 years old girl issue notice to PM Manmohan singh | தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி | Dinamalar

தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி

Updated : டிச 19, 2012 | Added : டிச 18, 2012 | கருத்துகள் (19)
Advertisement
தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி

லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார்.

நோட்டீசில், சிறுமி தெரிவித்துள்ளதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

"உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது' என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
19-டிச-201210:01:34 IST Report Abuse
Divaharan இந்திய முழுவதும் இருந்து தகவல்கள் திரட்ட வேண்டும். அதற்கு பல வருடங்கள் ஆகும் என சொல்ல போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-டிச-201209:37:08 IST Report Abuse
Pannadai Pandian இங்கு கருத்து எழுதும் பல அல்லகைகளுக்கு வயிறேரிச்சல், அல்சர் நோய் உள்ளது. இருவருக்கு நோய் முற்றி சீழ் கொண்டுள்ளது. இவர்களுக்கு அரசு சோனியாவுக்கு செலவிட்டது போல மருத்துவ உதவி செய்யுமா ???
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
19-டிச-201209:08:36 IST Report Abuse
Raj RTI மூலமாக தகவல் தருவதற்கே வலிக்குது என்றால், இன்னும் "வாங்க வெண்டியெதெல்லாம்" இருக்கே வழக்கம் போல மௌன சாமியாக "அடக்கமாக" இருங்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
19-டிச-201208:55:19 IST Report Abuse
Tamilnesan சிறுமிக்கு வாழ்த்துக்கள். ஆனால், பாத்தும்மா, 11 வயது சிறுமி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டாள் என்று காங்கிரஸ் கட்சியின் எடுபிடி CBI - ஐ ஏவி விட்டு உன்னை ஜெயிலில் தள்ளி விட போகிறார்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
VK . BOOPATHY - SIVAGANGAI SEEMAI,இந்தியா
19-டிச-201208:41:51 IST Report Abuse
VK .  BOOPATHY சிறுமிக்கு பின் யாரு இருக்கார் என்று அண்டவனுகுத்தான் வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
19-டிச-201207:47:35 IST Report Abuse
alriyath 11வயது என்ன பச்சை குழந்தையே கேட்டாலும் ஆச்சர்யமில்ல.. அப்படி இருக்கு இவனுங்க ஆட்சி... இலவசம், மானியம்னு மக்களை விற்று கொண்டிருகிறார்கள்... வேலை செய்து பொழைக்க சூழ்நிலைய ஏற்படுத்த வேண்டும்... படித்தவர்களை நம் நாடு பயன் படுத்த வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201207:45:01 IST Report Abuse
Guru iyo
Rate this:
Share this comment
Cancel
Hari - singapore,சிங்கப்பூர்
19-டிச-201207:26:51 IST Report Abuse
Hari பாராட்டுக்கள், உங்கள் கேள்விக்கு எப்படி பதில் அளிப்பது என்று சோனியாவின் ஜால்ராக்கள் மண்டையை பிய்துக்கொள்ளும். வழக்கம் போல் மன் மோகன் சிங்கக்கு என்ன செய்வது என்று தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
19-டிச-201206:49:24 IST Report Abuse
Giri Srinivasan நம்ம நாட்டு சுதந்திரத்தை மிகவும் கொட்ச்சைப்படுத்துவதாக கருதுகிறேன் நாட்டு நடப்பை, ஒரு பிரதமர் விளக்கி சொல்லமுடியாத நிலை ? இந்த நாட்டுக்கு இந்த சுதந்திரம் போதும் என கருதுகிறேன். எல்லாம் அரசியல் தான் ???
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
19-டிச-201206:17:56 IST Report Abuse
T.R.Radhakrishnan நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே......ஆனால், என்ன நம்ம மௌனி பாபா எப்படியும் பதில் அளிக்கப் போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை