we want peace: President Pranab | அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: பிரணாப்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: பிரணாப்

Updated : டிச 19, 2012 | Added : டிச 18, 2012 | கருத்துகள் (7)
Advertisement

கோவை:""இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது; நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், எத்தகைய சவாலை சமாளிக்கவும், பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

கடந்த, 50 ஆண்டுகளாக போர் மற்றும் அமைதிப் பணியில், இந்திய விமானப் படையின் பறக்கும் படைப்பிரிவுகள், "ஸ்குவாட்ரன் - 25' மற்றும், "ஸ்குவாட்ரன் - 33' சேவை செய்தன.இவற்றுக்கு, கோவை சூலூர் விமான படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தரப்படி நிலை - ஸ்டாண்டர்டு அந்தஸ்து அளித்து கவுரவித்தார்.

விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:இந்திய தேச பாதுகாப்பில், விமானப் படை பல்வேறு சிறப்பான சேவைகளை செய்துள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், அவற்றை வீரத்துடன் எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமை பெற்றுள்ளது.இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. இந்த குறிக்கோளுக்கு தான், இந்திய வெளியுறவுக் கொள்கையிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், சவாலை சமாளிக்க பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன.இனி வரும் காலங்களிலும், விருது பெற்றுள்ள, இந்த இரு படைப்பிரிவுகளும், புகழில் பல உயரங்களை எட்டுவது உறுதி.இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். படைப்பிரிவுகளுக்கு தரநிலை அந்தஸ்து விருது அளித்த பின், ராணுவ தபால் பிரிவு சார்பில், சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். மதியம், 12:35 மணிக்கு, விமானப்படை தனி விமானம் மூலம், டில்லி கிளம்பினார்.

நிகழ்ச்சியில், கவர்னர் ரோசைய்யா, விமானப்படை தளபதி பிரவ்னி, தென்பிராந்திய தளபதி ஆர்.கே.ஜாலி, தென்மேற்கு பிராந்திய தளபதி கோகாய் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ezhil - Thanjai ,இந்தியா
19-டிச-201210:26:20 IST Report Abuse
Ezhil இந்தியாவிற்கு அச்சுறுத்தல் மறைமுகமாக இலங்கை மூலமாகத்தான் வருகிறது... இந்தியாவுடன் அண்டை நாடுகள் போர் தொடுக்குமேயானால் அவர்கள் முதலில் பயன்படுத்தும் இலக்கு... தமிழகமாகத்தான் இருக்கும்... காரணம் இந்த காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குவதாக எண்ணி... மெத்தனம் காட்டுகிறது..தமிழக கடற்பகுதிகளில் பாதுகாப்பு சரியில்லை அதற்க்கு உதாரணம்..தமிழக மீனவர்களை இத்தனை முறை இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்து விரட்டுகிறது அதே பகுதியில் இந்திய கடற்படையினரும் காவலுக்கு இருந்தால் அவர்கள் ஏன் இந்திய மீனவர்களை காப்பாற்றவில்லை.. அதே இலங்கை ராணுவத்தினரோ அல்லது அவர்களுக்கு ஆதரவு, நமக்கு எதிரி இராணுவத்தினரோ தமிழக மீனவரை தாக்கிய அதே பகுதியில் வந்து தமிழகத்தை தாக்கினால் என்ன செய்வார்கள்... தமிழகமும் இந்தியாதானே...காங்கிரஸ் தமிழகத்தை தாக்கட்டும் பரவாயில்லை என விட்டு விடுமா? இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது...இப்போது கார்கில் போல் எதாவது பிரச்சனை வந்தால் காங்கிரஸ் இந்தியாவை விட்டு நாம் எப்படி தப்பித்து கொள்ளலாம் என திட்டம் தீட்டுமே தவிர காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும், நாட்டின்மேல் அக்கறை இல்லை...சுயநலமே அதிகமாக உள்ளது... தமிழக கடலோரத்தை எதிரிகளுக்கு தரை வார்க்கும் காங்கிரஸ் அரசு ஆபத்தை உணரவேண்டும்...இந்திய நரிக்கு பாலூட்டி வளர்க்கிறது... நாய்க்கு அல்ல. நரி நமக்கு எதிராக செயல்படும் எதிர்காலத்தில் இதை இந்திய உணரும்...
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
19-டிச-201210:04:52 IST Report Abuse
R.Saminathan மின்சாரம்,தண்ணீர், தமிழக மீனவர்கள்,இலங்கை தமிழர்களின் நிலை என்ன.? இவர்களின் வாழ்க்கை இன்றும் கேள்விக்குறியா இருக்கிறது,,,. இதுதெல்லாம் தெரியாம வசனம் பேசுகிறார் நமது நாட்டு ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
19-டிச-201209:16:41 IST Report Abuse
Kankatharan  பாதுகாப்பு படைகள் உசாராக தயாராக உள்ளதாக இருக்குதுங்கிரீங்க்க, தமிழ் நாட்டு கடற்கரையில் எப்பவும் எழவா இருக்கு சிறிலங்க படைகள் உங்க காதுக்கு செய்தி வல்லியோ
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
19-டிச-201209:05:35 IST Report Abuse
Raj "இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், எத்தகைய சவாலை சமாளிக்கவும், பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன'' இலங்கை கடற் படையினர் அட்டூழியம் செய்யும்போது மட்டும் ஒண்ணுமே செய்வதில்லையே ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
19-டிச-201206:22:11 IST Report Abuse
Jai திரு அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவு நனவாகும்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
19-டிச-201203:50:16 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எது இறையாண்மையின் அச்சுறுத்தல் மேதகு ஜனாதிபதி அவர்களே, உள்ளிருந்து தீவிரவாதிகளை வளர்பவர்களா, இல்லை வெளியிருந்து உள்ளே அனுப்புபவர்களா? ரெண்டுமே நடக்குது இங்க, எல்லோருக்கும் தெரியும் இது, அப்படியிருந்தும்? திகார் ஜெயில் வாசிகள் தான் தேசத்தின் தூண் என்றாகி வரும் இந்த தேசம் எப்படி அச்சுறுத்தலை எதிர் கொள்ள போகிறது.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
19-டிச-201201:56:16 IST Report Abuse
babu இந்தியாவில் தமிழக மீனவர்கள் தாக்க படுவது அச்சுறுதலா அமைதி பேணலா, இடாலியன் துப்பாக்கி சூடு அச்சுறுதலா அல்லது அமைதி பேணலா பேச்சு கோணலாக உள்ளது, நேர் பட பேசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை