சென்னை: "தமிழகத்தை இருட்டு காடாக்கிய கறுப்பு மனிதன் கருணாநிதி' என்ற வாசகங்களுடன் கூடிய, போஸ்டர் ஒட்டியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., சட்டத்துறை செயலாளர், எஸ்.ஆர்.பாரதி தலைமையில், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலத்தில், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புகார் அளித்தனர். அதன் விபரம்: தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி பற்றிய சுவரொட்டிகள், சென்னை மாநகரின் பல முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. கருணாநிதியின் உருவத்தை கேவலமாக சித்தரித்து, ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "மக்களே ஏமாறாதீர்கள்' என, தலைப்பிட்டு, அதில், "மக்களை ஏமாற்ற, தமிழகத்தை இருட்டு காடாக்கிய கறுப்பு மனிதன் மூளையற்ற கருணாநிதியின் முட்டாள்தன போராட்டம்' என, அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகங்கள் மற்றும் சித்திரங்கள் மிகவும் அருவருப்பான கருத்தை வெளிப்படுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும், பொது மக்கள் மத்தியில், குறிப்பாக, தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை அச்சடித்து ஓட்டிய, சின்னசாமி எம்.எல்.ஏ., அர்ஜுனன் மற்றும் விதிகளுக்கு புறம்பாக அச்சிட்ட அச்சகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.