மதுரை: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, கொடைக்கானலில் நடந்து வரும் பயிற்சி பட்டறை, அதிகார போட்டியில் பனிப்போர் நடத்தி வந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு "கொம்பு சீவி'விடுவதாக அமைந்துள்ளது. சென்னை தவிர, ஒன்பது மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், 96 நகராட்சிகளின் தலைவர்களுக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் சார்பில், கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டலில் பயிற்சி பட்டறை நடந்து வருகிறது.
"உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் உரிமை, உள்ளாட்சி விதிகள், நடைமுறை சட்டங்கள்,' குறித்து, மூன்று பேர் கொண்ட குழு, பயிற்சி அளித்து வருகிறது. ஒன்பது பிரிவாக நடந்து வரும் பட்டறையில், ஒரு பிரிவிற்கு மூன்று நாட்கள் வீதம், பயிற்சி நடக்கும். இதுவரை மூன்று பிரிவுகளுக்கான பயிற்சி முடிந்துள்ளது. டிச.,20ல் நான்காம் பிரிவில் பங்கேற்கும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், புதிதாய் பொறுப்பேற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குள் "பனிப்போர்' தொடங்கியது. மேயர்-மண்டலத் தலைவர்களுக்கு இடைய மாநகராட்சிகளிலும், தலைவர்-துணைத் தலைவர்கள் இடையே நகராட்சிகளிலும், அதிகார போட்டி வலுத்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், ஒவ்வொருவரின் அதிகார வரம்பை அறிந்து கொள்ளவும், இந்த பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்', "அனைவருக்கும் அதிகாரம்' இருப்பதாக, பயிற்சி பட்டறையில் தெரிவித்துள்ளனர். இதனால், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அதிகார போட்டி களை கட்டப்போகிறது.
முதல் பிரிவில் பயிற்சி பெற்ற, மதுரை மாநகராட்சி மண்டலம் 1ன் தலைவர் ராஜபாண்டி கூறியதாவது: "மண்டலத் தலைவர்களுக்கு சில அதிகாரங்கள் இல்லை, ரூ.5 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு, கமிஷனர் அனுமதியை பெற வேண்டும்,' என, மாநகராட்சி அதிகாரிகள் கூறி வந்தனர். "அப்படி எந்த சட்டமும் இல்லை,' என, கொடைக்கானல் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. "ஆவணங்களை பார்வையிடும் உரிமை முதற்கொண்டு, மண்டலத் தலைவர்களுக்கு உரிமை உண்டு,' என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக அலுவலக அதிகாரிகளே தெரிவித்த பின், இனி யாரும் எங்கள் உரிமையை மறுக்க முடியாது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.