Thiruppavai-Tiruvempavai | மார்கழி வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி வழிபாடு

Added : டிச 18, 2012
Advertisement
மார்கழி வழிபாடு

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்

திருப்பாவை - திருவெம்பாவை

திருப்பாவை


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து எடு. மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருமையாகி விடு. வலிமையான
தோள்களையுடைய பத்ம
நாபனின் கையிலுள்ள
பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை
வீசு. வலம்புரிச் சங்கு ஒலிப்பது போல் இடி
ஒலியெழுப்பு. வெற்றியை மட்டுமே ஈட்டும்
அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து
புறப்படும் அம்புகளைப் போல் மழை
பொழி. அம்மழையால் நாங்கள் இவ்வுலகில்
மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக, எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை
மகிழ்ச்சியடையச் செய்.

திருவெம்பாவை

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
பொருள்: "" சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை?'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்!
பச்சைக்கிளி போல் பேசும் சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.
எழுப்ப வந்தவர்களோ, ""உன்னை எழுப்ப வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
நாங்கள் தேவர்களின்
மருந்தாகவும், வேதங்
களின் பொருளாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக்
கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு,'' என்று கேலி செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை