கோவை : ""ராணுவத்தில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மத்திய தர மற்றும் கனரக ஹெலிகாப்டர் கொள்முதல், விமானப்படை வசம் இருக்க வேண்டும். ஒரே ரக ஹெலிகாப்டர்கள் இரு வெவ்வேறு படைகளில் இடம்பெறுவதால், "டூப்ளிகேஷன்' உள்ளிட்ட வீண் குழப்பம் ஏற்படும்,'' என, விமானப்படை தளபதி பிரவ்னி தெரிவித்தார்.
கோவை அருகே உள்ள சூலூரில், விமானப்படை தளபதி பிரவ்னி, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராணுவம் மற்றும் கடற்படைகளில் உள்ள, விமானப் பிரிவுகளுக்கு, இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்குவதை, நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மத்திய தர மற்றும் கனரக ஹெலிகாப்டர் கொள்முதல் திட்டங்கள் விமானப்படை வசம் இருக்க வேண்டும். ஒரே ரக விமானங்கள் முப்படைகளிலும் இடம்பெறுவதால், "டூப்ளிகேஷன்' உள்ளிட்ட குழப்பங்கள் ஏற்படும்; செலவும் அதிகமாகும். ராணுவத்தின் கொள்முதல் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி பாதுகாப்பின் முழு பொறுப்பும், விமானப்படை வசம் உள்ளது. நாங்கள் முன் வைத்துள்ள கொள்முதல் திட்டங்கள் எங்கள் வசம் இருக்கட்டும். எதிர்காலத்தில் ராணுவம் புதிய திட்டங்களுடன், அரசுக்கு பரிந்துரை அளிக்கலாம். இவ்வாறு, விமானப்படை தளபதி பிரவ்னி தெரிவித்தார்.
விமானப் படையில் 700 பைலட் பற்றாக்குறை : விமானப்படை தளபதி பிரவ்னி கூறியதாவது: விமானப்படையில் தற்போது, 700 பைலட் பணியிடங்கள் காலியாக உள்ளன. பைலட் பணிக்கு சிறந்த பயிற்சி வேண்டும். அதற்கு தகுதியான நபர்கள் வேண்டும். பைலட் பணியில் சேர பலர் முன்வந்தாலும், நாங்கள் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆறு மாதத்திலும், 220 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் கூடுதல் பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். 2017ம் ஆண்டுக்குள் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் சிவில் விமான நிறுவனங்களில் சேருவதற்காக, பைலட்கள் பலர் வெளியேறினர். ஆனால், அந்த பணி, அவர்களுக்கு சிறந்ததாக அமையவில்லை. சில விமான நிறுவனங்கள் மூடப்பட்டதால், மீண்டும் பைலட்கள் பலர் விமானப் படைக்கு திரும்பியுள்ளனர். வேறு எந்த துறையை விடவும், இங்கு தரமான வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.