திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் "மாயமான' துப்பாக்கி, தோட்டாக்கள் குறித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, தாசில்தார் கூறினார். கடந்த டிச.,8 ல், இந்த ஸ்டேஷனில் இருந்த "பிஸ்டல்' மற்றும் 30 தோட்டாக்கள் காணாமல் போயின. இது குறித்து மேலதிகாரிகள் நடத்திய விசாரணையில், எந்த "துப்பும்' கிடைக்கவில்லை. இதை கண்டுபிடிக்க, தாசில்தார் பழனியாண்டி, டி.எஸ்.பி. மோகன்ராஜ். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்குமார் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் கூறியதாவது: முதல்கட்ட விசாரணை துவங்கியுள்ளது. "பிஸ்டல்' தொடர்பான பதிவேடு ஆவணங்கள், ஆயுத அறை உட்பட போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்னும், ஓரிரு வாரத்தில், இதுகுறித்த அறிக்கை மேலதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.