போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில், பணத் தகராறு காரணமாக, 8ம் வகுப்பு மாணவியை, 10ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரித்த, கொடூர சம்பவம் நடந்துள்ளது. தீ வைத்து எரித்த மாணவி, கைது செய்யப்பட்டார்.ம.பி., மாநிலத்தின், ரசியான் மாவட்டத்தில் உள்ளது, பரேலி நகரம். இங்குள்ள, மேல்நிலை பள்ளியில், அருகில் உள்ள, சக்தி நகர் என்ற பகுதியை சேர்ந்த மாணவியர், குஷ்பு, 15, மற்றும் ரூபாலி, 18, படித்து வருகின்றனர்.இருவரும், அருகருகே வசித்து வந்ததால், ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வந்தனர்.
இதில், இருவருக்கும் இடையே, நல்ல நட்புறவு நிலவி வந்தது. இந்நிலையில், குடும்ப தேவைக்காக, ரூபாலியிடம் இருந்து, 5,000 ரூபாயை, குஷ்பு வாங்கியுள்ளார்.அதை திரும்ப கேட்டதில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பணம் குறித்து, இரு குடும்பத்தினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். ஒருகட்டத்தில், ரூபாலியின் நடத்தை குறித்து, குஷ்புவின் பெற்றோர், அபாண்டமாக புகார் கூறினர்.
இதனால், குஷ்பு மீது ரூபாலிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. நேற்று முன்தினம், தன் வீட்டிலிருந்த, மண்ணெண்ணெய் நிரம்பிய, கேன் மற்றும் தீப்பெட்டியுடன், குஷ்புவின் வீட்டுக்கு, ரூபாலி சென்றாள். அங்கு இருந்த குஷ்பு மீது, மண்ணெண்ணெய் ஊற்றி,
தீ வைத்தாள்.:இதை சற்றும் எதிர்பார்க்காத குஷ்பு, அலறி துடித்தாள். சத்தம் கேட்டு, அவளின் தாய் ஓடி வந்து, தீயை அணைக்க முயன்றார்.
எனினும், உடலின், 60 சதவீதம், தீயில் கருகிவிட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு, மேல் சிகிச்சைக்காக, போபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே, குஷ்பு இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, போபால் எஸ்.பி., சசிகாந்த் சுக்லா, ""ரூபாலி மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.