தேவாரம் : பெரியாறு அணை பாதுகாப்பு குழு சார்பில், டிச., 21ல் "எழுச்சி நாள்' கொண்டாடி, புதிய கொடி அறிமுகப்படுத்ப்பட உள்ளது. கடந்த ஆண்டு, டிச., 5 ல் முல்லை பெரியாறு அணை பிரச்னை துவங்கியது. குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய கேரளா எல்லையை நோக்கி, பல்லாயிரம் பேர் திரண்டு, போராட்டம் நடத்தினர். டிச., 21 ல், லோயர் கேம்பில் நடந்த முற்றுகை போராட்டத்தை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனத்தை பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். போலீசார் நடத்திய கல்வீச்சில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் காயமடைந்தனர். பத்திரிகையாளர்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேப்படுத்தப்பட்டன. கூடலூரில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்ததினத்தை நினைவு கூறும் விதமாக, கூடலூரில் "எழுச்சி' நாள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஜயக்குமார் கலந்து கொண்டு, போராட்ட சி.டி., தொகுப்பை வெளியிடுகிறார். முல்லை பெரியாறு பாதுகாப்பு குழுவிற்காக, வடிவமைக்கப்பட்ட, பச்சை நிறத் துணியில், பென்னிகுக் படம் இடம் பெற்றுள்ள கொடி, அறிமுகப்படுத்தப்படுகிறது.