Pandian Grama bank expands their service | 680 கிராமங்களில் விரைவில் பாண்டியன் கிராம வங்கி கிளை : நிர்வாக செயல் இயக்குனர் ஏ.கே.பன்சால் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

680 கிராமங்களில் விரைவில் பாண்டியன் கிராம வங்கி கிளை : நிர்வாக செயல் இயக்குனர் ஏ.கே.பன்சால்

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர் : ""நடப்பாண்டில் 680 கிராமங்களில், பாண்டியன் கிராம வங்கி கிளை துவக்கப்படும்,'' என, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக செயல் இயக்குனர் ஏ.கே.பன்சால் தெரிவித்தார். விருதுநகரில் நடந்த பாண்டியன் கிராம வங்கி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு, 34.24 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கி அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 15 மாவட்டங்களில், 218 கிளைகளுடன் வங்கி செயல்படுகிறது. விரைவில், அனைத்துப்பகுதியிலும் ஏ.டி.எம்., மையங்கள் துவக்கப்படும். இந்தாண்டு கடன் இலக்கு 4292 கோடி. அதில், இன்றுவரை 3069 கோடி ரூபாயை எட்டியுள்ளது. சுரோஜ்கார் கடனுதவி திட்டத்தின் கீழ், 812 பயனாளிகளுக்கு 3.68 கோடி, 3 லட்சத்து 86 ஆயிரத்து 034 விவசாய கடன் அட்டைதாரர்களுக்கு, 615.63 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை