மதுரை: குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளைக் கையாளும் சமூக நலத்துறை மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, தொடர் இடைவேளையில், "கவுன்சிலிங்' அளிக்க வேண்டும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக நலத்துறையை அணுகும் போது, அத்துறை அதிகாரிகள் "கவுன்சிலிங்' அளித்தனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு, சமூக நலத்துறையில், மாவட்ட பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் "கவுன்சிலிங்' அளித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்த பின், கணவர் மற்றும் குடும்பத்தினரை வரவழைத்து "கவுன்சிலிங்' செய்வர். இதில் தீர்வு ஏற்பட்டால், சமரசமாக சென்று விடுவர். இல்லாவிடில், குடும்ப வன்முறை நிகழ்வு அறிக்கை (டி.ஐ.ஆர்.,) தயாரித்து, கோர்ட்டுக்கு அனுப்புவர். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் செல்ல விரும்பாத பெண்களுக்கு, சமூக நலத்துறை மிகப்பெரிய அடைக்கலமாக இருந்தது. தற்போது பாதுகாப்பு அலுவலர்கள் கோர்ட் அனுமதியின்றி, "கவுன்சிலிங்' செய்யக்கூடாதென, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், குடும்ப வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளும், நேரடியாக கோர்ட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. பாதுகாப்பு அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், வீணாகி வருகிறது.
புத்துணர்வு பயிற்சி தேவை: சமூகநலத்துறை, பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் சட்டம், புதிய நடைமுறை தொடர்பான புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்வு பயிற்சி அளிப்பதன் மூலம், பிற மாவட்ட அலுவலர்களின் அணுகுமுறை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். மனநல டாக்டர்கள், கோர்ட், போலீஸ் ஸ்டேஷனின் நடப்பு அணுகுமுறைகளை கற்றுக் கொள்ள முடியும். பணி நியமனத்திற்குப் பின், இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் புத்துணர்வு பயிற்சி அளிப்பதோடு, "கவுன்சிலிங்' நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் குடும்ப வன்முறை வழக்குகள், கோர்ட்டிற்கு செல்வதை குறைக்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.