கீவ்:உக்ரைன் நாட்டில், கடுங்குளிரால், 37 பேர் பலியாகியுள்ளனர்.ஐரோப்பிய நாடான உக்ரைனில், தற்போது மைனஸ், 17 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்படுகிறது. இதனால், பலரது உடலின் வெப்பநிலை, கணிசமாக குறைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில், இதுவரை, 37 பேர் குளிர் தாங்க முடியாமல் இறந்து விட்டனர்.வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்காக, உக்ரைன் அரசு, 1,500 தங்கும் இடங்களை அமைத்து, உணவு வழங்கி வருகிறது.கடும் பனி பொழிவால், கீவ் நகர், சாலையில் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.