சென்னை: மதுரை, திருவனந்தபுரம், துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 15ம் தேதி, துரந்தோ ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த ரயில்களில், நேற்றைய நிலவரப்படி, சென்ட்ரலிலிருந்து மதுரைக்கு இயக்கபடும், துரந்தோ ரயில் வரும், 24ம் தேதி மட்டும் "ஹவுஸ்புல்' ஆகியுள்ளது. மதுரையிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு வரும், 25ம் தேதி இயக்கப்படும், துரந்தோ ரயிலில், "ஏசி' மூன்றாம் வகுப்பு மட்டும், முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகுப்பில், படுக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில், 10 பேர் உள்ளனர். மற்ற நாட்களில், "ஏசி' மூன்றாம் வகுப்பை விட, மற்ற வகுப்புகளில் அதிக இடங்கள், முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 21 மற்றும், 25ம் தேதிகளில் இயக்கப்படும், துரந்தோ ரயிலில், அனைத்து வகுப்புகளும், முன்பதிவு செ#யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து, 29ம் தேதி சென்ட்ரலுக்கு இயக்கப்படும், துரந்தோ ரயிலில், அனைத்து வகுப்புகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற நாட்களில், ஜனவரி வரை, "ஏசி' மூன்றாம் வகுப்பில், குறைந்த இடங்களே உள்ளன. "ஏசி' இரண்டாம் வகுப்பு மற்றும், "ஏசி' முதல் வகுப்புகளில், நிறைய இடங்கள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: துரந்தோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு, நான்கு நாட்கள் தான் ஆகின்றன. மதுரை துரந்தோ ரயிலுக்கான முன்கூட்டியே முன்பதிவில், 60 சதவீத இடங்களும், ரயில் புறப்படும் போது, 20 சதவீத இடங்கள் வரை முன்பதிவு ஆகிவிடுகிறது. திருவனந்தபுரம் துரந்தோ ரயிலில், முன்பதிவில், 50 சதவீதமும், புறப்படும் போது, 20 சதவீத இடங்களும் முன்பதிவு ஆகிவிடுகிறது. இந்த ரயில்களுக்கு இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள், பயணிகளிடம், 100 சதவீத வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.