கெய்ரோ:எகிப்து அதிபரால் நியமிக்கப்பட்ட, அட்டர்னி ஜெனரல், நீதிபதிகளின் முற்றுகை போராட்டத்தால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டதட்ட, 30 ஆண்டுகளாக, ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
முர்சி, அதிபரானது முதல், நீதித்துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது, நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைக்கேடு நடந்ததாக கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட்டை கலைத்தது.
ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
முபாரக் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட, அட்டர்னி ஜெனரல் அப்துல் மஜீத்தை நீக்கி விட்டு, அந்த பதவியில் தலாத் இப்ராகிம் அப்துல்லா என்பவரை, அதிபர் முர்சி நியமித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் அதிகமான நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை, போராட்டக்காரர்களிடமே ஒப்படைத்தார், தலாத் இப்ராகிம்.
அட்டர்ஜி ஜெனரலின் ராஜினாமா கடிதம், உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவுன்சிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த கடிதம் பரிசீலிக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.