A drunker person climb up electric post | காக்கா உட்கார்ந்தா "கரண்ட்' அடிக்கவில்லையே... : போதையில் மின்கம்பத்தில் ஏறிய பால் வியாபாரி| Dinamalar

காக்கா உட்கார்ந்தா "கரண்ட்' அடிக்கவில்லையே... : போதையில் மின்கம்பத்தில் ஏறிய பால் வியாபாரி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

விருதுநகர் :விருதுநகர் அருகே,மது போதையில் இருந்த பால் வியாபரி ஒருவர்,"காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்' அடிக்க மாட்டேன்குது, நானும் ஏறி பார்க்கிறேன்,'' என, மின் கம்பத்தில் ஏறியவரை, கீழே இறக்குவதற்குள், அப்பகுதிமக்கள் மற்றும் போலீசாருக்கு போதும்... போதும்...என்றாகிவிட்டது.

விருதுநகர் அருகே ரோசல்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி ரங்கராஜ், 50. இவர், நேற்று பிற்பகல் 2 மணிக்கு, மது போதையின் உச்சத்தில் இருந்தார். விருதுநகர் ராமமூர்த்தி ரோடு வழியாக வந்தபோது, ""மின் கம்பத்தில் காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்' அடிக்க மாட்டேன்குது, நானும் ஏறி பார்க்கிறேன்,'' என, மின் கம்பத்தில் ஏறி உட்கார்ந்து கொண்õடர்.தகவலறிந்த மின்சார வாரியத்தினர், அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்தடை செய்தனர். அப்போது அவர்,மின் கம்ப வயர், பீஸ் கேரியரை பிடுங்கினார். போலீசார், பொது மக்கள் ஒரு மணி நேரமாக போராடியும், ரங்கராஜ் கீழே இறங்கவில்லை. பின் போலீசார்,டிப்பர் லாரியை வரவழைத்து, அதன் மீது ஏறி, ரங்கராஜை அடித்து கீழே இறக்கி, விரட்டி விட்டனர்.

அப்பகுதி ராஜ்குமார் ,""விளம்பரத்திற்காக, இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் பொது மக்கள் தான் பாதிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை வெளியில் வர முடியாத வகையில்,போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களும் திருந்துவார்கள்,'' என்றார்.

டி.எஸ்.பி., ராமமூர்த்தி ,""மது போதையில் மின் கம்பம் மீது ஏறிய ரங்க ராஜ் மீது, தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். டவர், மின்கம்பம் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
20-டிச-201203:11:31 IST Report Abuse
Jagannathan B ஒரு படத்தில் வடிவேலு இதைத்தான் செய்தார். ஒரு பெண், தன உள்ளாடை மின்கம்பியில் ஒரு காக்காய் கொண்டு போட்டு விட்டது என்பாள். உடனே வடிவேலு கம்பத்தில் ஏறுவார். கிழே இருந்த ஒருவர் 'டே மாக்கான் சாகப்போறேடா " என்பார். உடனே வடிவேலு " இத்துனூண்டு குருவி உட்காருகிறது நான் போனால் என்ன என்று மேலே சென்று லாவகமாக உள்ளாடையை எடுத்து விடுவார். தமிழ் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளாலே தான் இத்தகைய செயல் நடக்கும். வழிப்பறி திருட்டு எல்லாம். கலைவாணர் தங்கவேலு எல்லாம் எங்கே. இவர்கள் எங்கே. எல்லாம் வசனம் எழுதுபவர்களை சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
pasupathi - muscat,ஓமன்
19-டிச-201212:12:59 IST Report Abuse
pasupathi என்ன செய்வது ...இவர் ஒன்றும் பெரிதாக தப்பு செய்யவில்லை. அவர் ரேஞ்சுக்கு என்ஜாய் பண்ணுகிறார். விடுங்க
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201212:12:25 IST Report Abuse
Rajagiri.Siva போதை தலைக்கேறியதால் வந்த விபரீதம்...தலை தப்பியதே பெரிய விசயம்..."காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்' அடிக்க மாட்டேன்குது'' என சொன்னவர், காக்கா மாதிரி பறக்க முயற்சி செய்யவேண்டியதுதானே? எல்லாம் போதை படுத்தும் பாடு...
Rate this:
Share this comment
Cancel
Jerome Pravin - Chennai,இந்தியா
19-டிச-201211:23:11 IST Report Abuse
Jerome Pravin கரண்ட் இருந்தா தன மக்களே ஷாக் அடிக்கும்... கரண்ட் காணம்னு தமிழ்நாடு மக்கள் கம்ப்ளைன்ட் குடுத்து பல மாசங்கள் ஆகுது...
Rate this:
Share this comment
Cancel
Jerome Pravin - Chennai,இந்தியா
19-டிச-201211:20:18 IST Report Abuse
Jerome Pravin கரண்ட் இருந்தா தான மக்களே ஷாக் அடிக்கும்...
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
19-டிச-201211:04:01 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM எந்த அளவுக்கு ஒசத்தியான சரக்கு ....அவரை சொர்கத்துக்கு அழைத்து சென்றுள்ளது ....கரண்டு கம்பி மூலம் ....
Rate this:
Share this comment
Cancel
Jafar Ali - Khobar,சவுதி அரேபியா
19-டிச-201210:50:47 IST Report Abuse
Jafar Ali தமிழ் நாட்டில் மின்சாரம் என்பதே இல்லை என்பதை அறியாதவரா அந்த பால்காரர் ?
Rate this:
Share this comment
Mahendra Babu R - Chennai,இந்தியா
20-டிச-201202:45:57 IST Report Abuse
Mahendra Babu Rஅட, அந்த தைரியத்தில் தான்பா ஏறி இருக்காரு. எப்பிடியும் கரண்டு இருக்காது. ஒரு விளம்பரமா இருக்கட்டுமே. 'தினமலர்' பேப்பர்ல லாம் போடுவாங்க ன்னு சொல்லி ஏறி இருப்பார்....
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
19-டிச-201210:50:21 IST Report Abuse
ஆனந்த் அம்மா தயவில் மின்தடை இருப்பதால் தப்பித்தார்.. நன்றி சொல்ல வேண்டியது தமிழக அரசுக்குத்தான்
Rate this:
Share this comment
Cancel
jawahar - chennai,இந்தியா
19-டிச-201210:35:56 IST Report Abuse
jawahar இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் மின்தடை ...... ஒரே காமெடி தான் போங்க
Rate this:
Share this comment
Cancel
Faithooraan - Pudugai.,இந்தியா
19-டிச-201210:18:11 IST Report Abuse
Faithooraan கரண்ட் இல்லாத மரத்தில் குருவி போல குடி இருந்தாலும் தப்பில்ல ...விடுங்கப்பா.குருவிஜாதி குடிகாரன் அல்லவா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.