லண்டன்:கர்நாடகாவை சேர்ந்த டாக்டர், பிரிட்டனில் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர், மதுஹொன்னய்யா, 33. பிரிட்டனில், சுவான்சீ பகுதியில் உள்ள, மருத்துவமனையில் டாக்டராக இருந்தார். இவருடன் பணிபுரிந்த டாக்டர் எம்மா ரிக்டோன், 32, என்பவரை, மது காதலித்தார்.இதற்கிடையே, காதலி எம்மாவுக்கு, ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து சென்று விட்டார். இருப்பினும் இருவரும் காதலித்து வந்தனர். திருமண நிச்சயமும் ரகசியமாக முடிந்தது.
இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம், என்ற மதுவின் யோசனையை எம்மா நிராகரித்து விட்டார்.இதற்கிடையே, இந்தியாவுக்கு, பெற்றோரை பார்க்க, மது வந்தபோது, உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி, வற்புறுத்தப்பட்டார். ஆங்கில பெண்ணுடன், நிச்சயம் முடிந்து விட்டதாக மது சொன்னதால், பெற்றோர் வருத்தமடைந்தனர்.இதனிடையே, ஆஸ்திரேலியா சென்ற ரிக்டோன், மதுவுடனான தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால், மது மனவருத்தம் அடைந்தார்.
இந்நிலையில் அவருடைய நண்பர்கள், அவருக்கு போன் செய்த போது, தொடர்பு கிடைக்கவில்லை. பழைய காதலி ரிக்டோனும், இவருக்கு போன் செய்துள்ளார். இவர் வேலை பார்த்த மருத்துவமனையில்,ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தால், மது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.மதுவின் நண்பர்கள், அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்த போது, விஷ ஊசி போட்டு கொண்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தனது தற்கொலைக்கான காரணத்தை அவர், எட்டு பக்கத்துக்கு, கடிதம் எழுதியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.