கோவை:
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து
வருகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசு
அறிவித்த காலணிகள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபடம் ஆகிய
நலத்திட்டங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் எதிர்பார்ப்பில்
காத்து கிடக்கின்றனர்.பள்ளி மாணவர்களின் நலன் கருதி நடப்பு ஆண்டில் தமிழக
அரசு இலவச நோட்டுகள், வண்ண பென்சில்கள், 4 செட் சீருடை, புவியியல் வரைபடம்,
கணித உபகரண பெட்டி, காலணி, மடிக்கணிணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை
அறிவித்துள்ளது.
ஆனால், எந்த ஒரு உதவிகளும் உரிய நேரத்தில் மாணவர்களை
சென்றடைவதில்லை.சீருடைகள், நோட்டுகள், புத்தகங்கள், மிக தாமதமாக மாணவர்களை
சென்றடைந்த நிலையில், தற்போது காலணிகள், கணித உபகரணப்பெட்டி,புவியியல்
வரைபடம் முதலியவற்றை எதிர்நோக்கி மாணவர்கள் காத்துள்ளனர்.
தமிழகத்தில் 6
முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கணித உபகரணப்பெட்டிக்கு 16.11 கோடியும்,
புவியியல் வரைபடத்திற்கு 23.01 கோடியும், 1 முதல் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு காலணிகள் வழங்க 94.76 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.கோவை
மாவட்டத்தில் காலணிகள் பெறுவதற்கு 90 ஆயிரத்து 83 மாணவர்களும், கணித உபகரண
பெட்டி பெறுவதற்கு 96 ஆயிரத்து 954 மாணவர்களும், புவியியல் வரைபடம்
பெறுவதற்கு 96 ஆயிரத்து 954 மாணவர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து
அரசு பள்ளி மாணவன் குமார் கூறுகையில், "" புவியியல் வரைபடம், கணித உபகரண
பெட்டி, காலணிகள் விரைவில் கிடைக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை கிடைக்கவில்லை,''என்றார்.இதுகுறித்து, கோவை மாவட்ட கல்வி
அதிகாரிகள் கூறுகையில், " காலணிகள், புவியியல் வரைபடம், கணித உபகரண பெட்டி
எப்போது கிடைக்கும் என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. "எங்களுக்கு
கிடைத்த 3 நாட்களில், மாணவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுப்போம்,'
என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.