மதுரை: தமிழகத்தில் வாகன ஓட்டிகளின் போலி லைசென்சை தடுக்க, கருவிழி, விரல் ரேகையை பதிவுடன், புதிய லைசென்ஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மது அருந்தியவரின் லைசென்ஸ் உரிமத்தின் பதிவு எண், விலாசம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. இரண்டாவது முறையாக, அதே நபர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. ஆறு மாத இடைவெளிக்கு பின், கருணை அடிப்படையில் மீண்டும் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
கருவிழி, விரல் ரேவை பதிவு: லைசென்ஸ் ரத்து செய்யப்படும் வாகன ஓட்டிகள், ஒரிஜினல் லைசென்சை போல், கம்ப்யூட்டர் உதவியுடன் போலியாக தயாரித்து, பயன்படுத்தி வருகின்றனர். அவை கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலி லைசென்சை தடுக்க, கருவிழி, விரல் ரேகையை பதிவு செய்து, புதிய லைசென்ஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2013 இறுதிக்குள் பைக், ஆட்டோ, இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அனைவருக்கும் புதிய லைசென்ஸ் வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, வட்டார போக்குவரத்துத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்புதிய லைசென்சை தேசிய அளவில் பயன்படுத்த முடியும். இதனால், போலி லைசென்ஸ் பயன்பாடு முடிவுக்கு வரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.