Advertisement
செக்ஸ் விபத்து: ஆஸி.,பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:12 IST

கேன்பெர்ரா:பணி நிமித்தமான பயணத்தில், ஓட்டல் அறையில் நண்பருடன் செக்ஸ் உறவு வைத்து கொண்ட போது, விளக்கு விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு, நஷ்ட ஈடு வழங்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரைச் சேர்ந்த ஒரு பெண், 2007ல், அலுவலக பணி காரணமாக, நவ்ரா என்ற நகருக்கு சென்றார். அங்கு ஒரு சாலையோர ஓட்டலில், நண்பருடன் செக்ஸ் உறவு கொண்டார். ஓட்டல் அறையில் இருந்த பெரிய விளக்கு ஒன்று, திடீரென பெயர்ந்து, இந்த பெண்ணின் முகத்தில் விழுந்தது. இதில், அவருக்கு மூக்கு மற்றும் வாயில், பலத்த காயம் ஏற்பட்டது.


பணி நிமித்தமாக சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டதால், அலுவலகத்தின் சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, இந்த பெண் கோரியிருந்தார். நிவாரணம் வழங்குவதற்காக, "காம்கார்" என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் இவரிடம் விசாரித்தது.செக்ஸ் உறவின் போது இந்த விபத்து ஏற்பட்டதால், நிவாரணம் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது.


இதை எதிர்த்து, தொழிலாளர் நடுவர் மன்றத்தில், இவர் புகார் செய்தார். நடுவர் மன்றமும், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பதில் அளித்தது.இதனால், அந்த பெண், உயர்நீதிமன்றத்தை அணுகினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய நஷ்ட ஈடு வழங்கும் படி, உயர்நீதிமன்றம், தற்போது, தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இன்சூரன்ஸ் நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டை அணுக திட்டமிட்டுள்ளது.



மேலும் உலகம் செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
வாசுதேவன் - Doha  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201201:07:47 IST Report Abuse
வாசுதேவன் அடடே பாரதி் தேடும் புதுமைப் பெண் இவர்தானோ
Rate this:
0 members
0 members
16 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.