தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, பள்ளி வேன், ரோட்டோரம் கவிழ்ந்ததில், "லிப்ட்' கேட்டுச் சென்ற, பிளஸ் 2 மாணவி பலியானார். தூத்துக்குடி, புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிக் பள்ளி வேன், மாணவர்களை அழைத்து வருவதற்காக, நேற்று காலை, 8:00 மணிக்கு, ஓசனூத்துக்கு புறப்பட்டது. சில்லாநத்தம் பள்ளியில், பிளஸ் 2 படித்த, சண்முகையா மகள் சுதா, 17, உள்ளிட்ட நான்கு மாணவியர், செவல்குளத்தில் வேனை மறித்து, பஸ் இல்லாததால், "லிப்ட்' கேட்டு ஏறினர்.
செவல்குளம் ஊருக்கு வெளியே வேன் சென்றதும், அதன் கதவு திடீரென திறந்தது. அதனருகில் நின்ற சுதா, ரோட்டோர பள்ளத்தில் விழுந்தார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சுதா மீது விழுந்து கவிழ்ந்தது; இதில், அவர் பலியானார். இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற மூன்று மாணவியர் தப்பினர். வேன் டிரைவர் கண்ணனிடம், ஒட்டப்பிடாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.