""மூன்று நாட்களுக்கு முன்பே கத்திக்கு சாணை தீட்டினேன்'' : புது மாப்பிள்ளையை கொன்றவர் வாக்குமூலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கம்பம் :""என்னை மதிக்காததால், தாய் பார்த்த மாப்பிள்ளையை கொலை செய்ய, மூன்று நாட்களுக்கு முன்பே கத்திக்கு சாணை தீட்டினேன்,'' என, தங்கையை பெண் பார்க்க வந்த வாலிபரை கொலை செய்த, ஜெயபாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் நேதாஜி நகரில், கடந்த, டிச.,16ல், பெண் பார்க்க வந்த பெரியகுளம் சல்லிப்பட்டியை சேர்ந்த சரவணனை, பெண்ணின் சகோதரர் ஜெயபாண்டி, கத்தியால் குத்தி கொலை செய்தார். மறுநாள் அவரது தாய் ராணியும், சகோதரி மீனாவும் தற்கொலை செய்து கொண்டனர்.
ஜெயபாண்டியை, கம்பம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் : என் தாய் ராணி மீதும், தங்கை மீனா மீதும், மிகுந்த பாசம் வைத்திருந்தேன். ஆண் பிள்ளையாக இருப்பதால், நானே என் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினேன். மாப்பிள்ளையும் பார்த்து வந்தேன். என் அம்மாவும், கடந்த சில மாதங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

"அவனை எனக்கு பிடிக்கவில்லை' : பெரியகுளம் சல்லிபட்டியை சேர்ந்த சரவணனை பார்த்து, முடிவு செய்தார். அவனை எனக்கு பிடிக்கவில்லை. நான் அவனிடம் மொபைல் போனில் எச்சரிக்கை செய்தேன். அவன் கேட்கவில்லை. என் தாயும், சகோதரியும் கூட, என்னை மதிக்கவில்லை. எனவே, சரவணனை கொலை செய்ய திட்டமிட்டேன்.
திருமணத்தை உறுதி செய்ய சரவணன் வருவதாக, என்னிடம் அம்மா, ஒரு வாரத்திற்கு முன்பு கூறினார். என் அப்பா ஆடு அறுக்கும் தொழில் செய்தவர். அவர் பயன்படுத்திய கத்தி ஒன்று வீட்டில் இருந்தது. அதை மூன்று நாட்களுக்கு முன்பே, சாணை தீட்டினேன். என்னை மதிக்காததால், இந்த கொலையை செய்தேன். யாரும் என்னை தூண்டவில்லை. என் எச்சரிக்கையை மீறி வந்ததால் தான், சரவணனை கொலை செய்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கொலை நடந்த இடம், ராணியின் வீடு அல்ல. அவர்கள் வீடு ஒரே ஒரு அறையை கொண்டது. திருமணம் உறுதி செய்யும் நிகழ்ச்சியை, அருகில் உள்ள உறவினர் வீட் டில் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அவர்களும் நல்ல நிகழ்ச்சி என்பதால், அனுமதித்துள்ளனர். ஆனால், இவ்வாறு கொலை நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மீனா இடுப்பில் சரவணன் போட்டோ : கொலையான சரவணனை, மீனாவிற்கு மிகவும் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது, சரவணனை பார்த்துள்ளனர். அப்போது தான் திருமண பேச்சு அரங்கேறியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மீனாவின் இடுப்பில் சரவணனின் போஸ்ட் கார்டு சைஸ் படம் சொருகியிருந்தது. எனவே, இறப்பதற்கு முன்பு கூட, சரவணனின் படத்தை மீனா பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
19-டிச-201206:46:06 IST Report Abuse
Skv நல்லா இருக்கு தமிழ் கலாச்சாரம். வரவர சினிமாலே பார்த்து இளசுங்க கெட்டுண்டெ வரது. சினிமாலே எல்லாம் இப்போ இப்படியெல்லாம் தானே வரது ,நீதி நல்லவையா இருக்கணும். பழிக்கு பழி வெட்டு குத்து அடிதடின்னுதான் படம் வரது. பலன் இப்படித்தான் இருக்கும். அன்று பாசமலர் பாத்து அண்ணன் தங்கை பாசம் செழிப்பாச்சு இப்போ ?????????
Rate this:
Share this comment
Cancel
sathia moorthy - coimbatore,இந்தியா
19-டிச-201200:54:40 IST Report Abuse
sathia moorthy இனி இவன் ஜாமீனில் வெளி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருப்பான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்