மதுரை: கிரானைட் விதிமீறல் தொடர்பான 15 வழக்குகளில், ஜாமின் பெற்ற மதுரை, பி.ஆர்.பி.கிரானைட்ஸ் பங்குதாரர் பி.பழனிச்சாமி, நேற்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்து, கையெழுத்திட்டார்.
மேலூர் பகுதியில் பொதுப்பணித் துறை வாய்க்கால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது; கிரானைட் கழிவுகளை கொட்டியது, மற்றும் நில அபகரிப்பு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பு, வெடிமருந்துச் சட்டம், மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில், பி.ஆர். பழனிச்சாமி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், 15 வழக்குகளில், டிச., 14ல் ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன் தினம் மாலை, பாளையங்கோட்டை சிறையில் இருந்து அவர், விடுவிக்கப்பட்டார். உடனடியாக மதுரை திரும்பிய அவரிடம், உறவினர்கள் நலம் விசாரித்தனர்.
பின், கோர்ட் உத்தரவுப் படி, நேற்று காலை, 10:30 மணிக்கு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார். மவுனமாகவே வந்தார்; சென்றார். கோர்ட் மறுஉத்தரவிடும் வரை, தினமும் கையெழுத்திடுவார் என, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.