நாகர்கோவில் : கன்னியாகுமரியில் வீசும் சூறை காற்றால், தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து வருகிது. இதனால், மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, குமரி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த சூறைகாற்றும் வீசி வருவதால், கடலில் பெரிய அலைகள் எழும்பி வருகிறது. இதனால், விவேகானந்தர்பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்கு நேற்றும் படகு போக்குவரத்து நடைபெறவில்லை. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், மேலமணக்குடி, கீழமணக்குடி, ஆரோக்கியபுரம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பூதப்பாண்டி அருகே அருமநல்லூர், வீரவநல்லூர் ஆகிய இடங்களில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.