உடுமலை : உடுமலை அருகே, மான்தோலை விற்க முயன்றவரை, வனத் துறையினர் கைது செய்தனர். உடுமலை அருகே, குறிச்சிக்கோட்டையில், மான்தோல் விற்பனை செய்யப்படுவதாக, உடுமலை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. வன சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் தலைமையில் வனத் துறையினர், குறிச்சிக்கோட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவரிடம், புள்ளி மான் தோல் இருந்தது தெரிந்தது, இதையடுத்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், உடுமலை எஸ்.வி., புரம் சுல்தான், 42, என்பது தெரிந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நாட்டுத் துப்பாக்கி, 14 தோட்டாக்கள், ஈய குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உடுமலை ஜே.எம்., 1 கோர்ட் மாஜிஸ்திரேட், கோகுல்முருகன் முன்னிலையில், சுல்தான் ஆஜர்படுத்தப்பட்டு, உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.