கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மகன் திட்டியதால் மனமுடைந்த வயதான தாய், தந்தை, 90 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர், வேலாயுதம், 70. இவரது மனைவி மாரிமுத்தம்மாள், 65. இவர்களுக்கு கந்தசாமி,40, என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், திருமணமாகி விட்டது. குடிப்பழக்கம் உள்ள கந்தசாமி, குடித்து விட்டு வந்து, அவ்வப்போது தாய், தந்தையை திட்டி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், அவர்களுக்கு சொந்தமான வயலில் கரும்பு வெட்டிய பணத்தை கேட்டு, கந்தசாமி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தகராறு ஏற்பட்டு, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மனவேதனையடைந்த வேலாயுதம், அவர் மனைவி மாரிமுத்தம்மாள், நேற்று அதிகாலை, 4: 30 மணியளவில், தங்கள் வயலில் உள்ள, 90 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கிணற்றில் மாரிமுத்தமாளின் உடல் மிதப்பதை, காலை, 7.00 மணிக்கு, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர், சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், உடலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. ஐந்து நீர் மூழ்கி மோட்டார்கள் மூலம், கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி, உடல்களை மீட்டனர். கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச் சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.