திரிசூலம் :துபாயில் இருந்து, சென்னை வந்த பயணியிடம், 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 175 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தோகாவில் இருந்து, நேற்று அதிகாலை, 3.30 மணிக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள், கண்காணித்து கொண்டிருந்தனர்.
இதில், நாகூரை சேர்ந்த சலிம் ஜாகிர், 36, என்ற பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. கோட், சூட் அணிந்திருந்த சலிம் ஜாகிரை, தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது, அவரது கோட்டில், 175 தங்க நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தவ. இதன் மதிப்பு, 42 லட்சம் ரூபாய்.
இது குறித்து, சலிம் ஜாகிரிடம், தொடர் விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.