மதுரை: ""தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதற்கு, "ஸ்கேன்' கருக்கொலைகளே காரணம்,'' என பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சார அமைப்பு மையக் குழு உறுப்பினர் ஜீவா தெரிவித்தார்.
மதுரையில் நடந்த மாநில பயிற்சியாளர்களுக்கான கருத் தரங்கில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2001 கணக்கெடுப்பில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், கூடுதலாக இருந்த 14 மாவட்டங்களில், தற்போது அதிகமாக குறைந்துள்ளது. கருக்கொலை, சிசுக்கொலையால் தொடர் கண்காணிப்பில் இருந்த மதுரை, தேனி, கரூர் உட்பட 10 மாவட்டங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் சற்றே கூடியுள்ளது. ஓராண்டில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாகவே இருக்கும். ஆனால் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 என்ற சராசரியே தற்போதுள்ளது. அதற்கும் குறைவாக இருந்தால், கண்டிப்பாக கருக்கொலை நடைபெறுகிறது என்று அர்த்தம். 2001ல் கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதம் 957, 949 ஆக இருந்தது. 2011ல் 895, 892ஆக குறைந்துள்ளது. "ஸ்கேன்' மூலம் கருவின் பாலினம் கூறப்படுவதால், பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் இருக்கும் போதே, பிறக்கப் போகும் குழந்தைகளின் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என, 1994ல் சட்டம் இயற்றப்பட்டு, 2002ல் திருத்தம் செய்யப்பட்டது. கருவின் பாலினத்தைத் தெரிவிக்கும் "ஸ்கேன்' மையங்களுக்கு, இதுவரை தண்டனை கிடைக்கவில்லை. அங்கீகாரம் இல்லாத மையங்களில் கருக்கலைப்பு செய்வதால், பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கிறது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள 14 மாவட்டங்களில் "ஸ்கேன்' மையங்களின் செயல்பாடுகள் குறித்த தொடர் கண்காணிப்பு இல்லாததே, கருக்கொலைக்கும், பெண்குழந்தைகள் குறைவதற்கும் காரணம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் இம்முறையில், இரண்டு லட்சம் பெண் குழந்தைகளை காணவில்லை. "ஸ்கேன்' மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நட
வடிக்கை எடுக்கவில்லை. திருச்சியில் கர்ப்பிணிகளின் "ஸ்கேன்' பதிவு, "ஆன்லைன்' மூலம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் "எப்' படிவத்தில் எந்த திருத்தமும் செய்ய முடியாததால், கருக்கலைப்பு தடுக்கப்பட்டது. ஆனால் இரண்டே மாதத்தில், இம்முறை நிறுத்தப்பட்டது. தொடர் கண்காணிப்பு இருந்தால், தமிழகத்தில் கருக்கொலையை தடுக்க முடியும், என்றார்.
"கருக்கொலை' மாவட்டங்கள் : கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், திருவள்ளூர், திருச்சி, நாகை, தஞ்சாவூர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.