Advertisement
நிரம்பியது கிருஷ்ணாபுரம் அணைக்கட்டு:பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:20 IST

பள்ளிப்பட்டு : கொற்றலை ஆறு உற்பத்தியாகும் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டுக்கு மழை நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், சில நாட்களாக இரவு நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கு திறக்கப்படும் தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைகிறது.திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய ஆறான கொற்றலை ஆறு, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. இங்கு உள்ள மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் லவ, குசா என, அழைக்கப்படும் இரண்டு ஆறுகளில் வருகிறது.இதில், கிருஷ்ணாபுரம், அம்மபள்ளி கிராமங்களுக்கு நடுவில் குசா ஓடையில், 1975ம் ஆண்டு, இரண்டு மலைகளுக்கு நடுவில், 4.37 கோடி ரூபாய் மதிப்பில், 488 மீட்டர் நீளத்தில் அணை கட்டப்பட்டது. இதில், மொத்தம், 17.22 கோடி கன அடி தண்ணீர் சேகரிக்க முடியும். இந்த ஏரியை நம்பி, 17 கிராமங்களில், 6,125 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கொற்றலை ஆறு இங்கிருந்து, குசா ஆறாக புறப்பட்டு, சாணாகுப்பம், வெளியகரம் வழியாக, தமிழக எல்லையான பள்ளிப்பட்டுக்கு வந்து, குமாரராஜூபேட்டை அருகில், லவ ஆற்றுடன் இணைகிறது. இங்கிருந்து, கொற்றலை ஆறாக புறப்பட்டு திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் வந்து, லட்சுமாபுரம் வழியாக பூண்டி ஏரியை வந்தடைகிறது.கிருஷ்ணாபுரம் அணைகிருஷ்ணாபுரம் அணை, 30 அடி உயரம் கொண்டது. சில நாட்களாக, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இந்த அணை நிரம்பி வருகிறது. தற்போது, 25 அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது.அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், விவசாயத்திற்காக அணையின் வடக்கு பகுதியில் உள்ள, ஒரு ஷட்டர் வழியாக மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிகமாக பெய்யும் நாட்களில் தெற்கு பகுதியில் உள்ள, இரண்டு ஷட்டர்கள் இரவு நேரத்தில் ஒரு சில மணி நேரம் மட்டும் திறந்து விடப்படுகின்றன. இது கொற்றலை ஆற்றின் வழியாக பூண்டி ஏரியை சென்றடைகிறது.பயன்பெறும் கிராமங்கள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டு மூலம், 17 கிராம விவசாயிகள் பயன் பெறுகின்றனர். அணையின் இடதுபுற கால்வாய் மூலம், கிருஷ்ணாபுரம், கத்திரிபள்ளி, அம்மகாரி ஏரி, ஏப்பில் ஏரி, நாயுடு ஏரி, மலைத்தள்ளி, சேகாட்டி, பச்சகாபலம், சவட்டகுன்றி உள்ளிட்ட கிராமங்களுக்குச் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.வலது புறம் கால்வாய் மூலம், கே.பி.பி.அக்ராவரம், துங்கம்பேட்டை, குஞ்சுவாரிப்பள்ளி, சொக்கமடுகுவு, பட்டுவாளி உள்ளிட்ட கிராமங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் இந்த கால்வாய்கள் மூலம், கிராமங்களுக்கு திறந்து விடப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.