மதுரை: ""படம் வெளியாகும் அன்று, "டி.டி.எச்'ல் வெளியிடப்படும் படம் (கமலின் விஸ்வரூபம்) மற்றும் சேட்டிலைட் சேனலுக்கு உரிமம் கொடுக்கப்படும் படங்களை திரையிட மாட்டோம்,'' என, தியேட்டர் உரிமை யாளர்கள் அறிவித்தனர்.
நடிகர் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படம் வெளியாகும் அன்றே, வீட்டிலிருந்தே "டிவி' யில் பார்க்கும் வகையில், டி.டி.எச்., சேவையில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால், வருவாய் பாதிக்கும் என வினியோகிஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "இம்முறையில் கமல் வெளியிடாவிட்டால், மற்றவர்கள் வெளியிடத்தான் போகிறார்கள்' என, சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து, சர்ச்சையை மேலும் தூண்டினர்.இந்நிலையில், மதுரையில் நேற்று, சினிமா தியேட்டர் உரிமையாளர்
களின் கூட்டம் நடந்தது. தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் ஹரி மற்றும் மதுரை உட்பட ஆறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவு குறித்து, தினமலர் நிருபரிடம், அண்ணாமலை கூறியதாவது: படம் வெளியாகும் அன்று, டி.டி.எச்., ல், வெளியிடப்படும் படம் மற்றும் சேட்டிலைட் சேனலுக்கு உரிமம் கொடுக்கப்படும் படத்தை திரையிட மாட்டோம். அது யாருடைய படமாக இருந்தாலும் சரி. ஏற்கனவே, தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து வருகிறது. இச்சூழலில், டி.டி.எச்., போன்றவற்றில் படங்களை ஒளிபரப்பினால், எங்களுக்கு வருவாய் பாதிக்கும். இதை வினியோகிஸ்தர்களும் ஏற்றுக் கொண்டு உள்ளனர். எங்கள் முடிவு குறித்து, தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து உள்ளோம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.