மதுரை: கிரானைட் முறைகேடு வழக்குகளில், பி.ஆர்.பி.,கிரானைட்ஸ் பங்குதாரர் பி.பழனிச்சாமி உட்பட முன்ஜாமின் கோரி நிலுவையில் உள்ளவர்களை ஜன.,21 வரை கைது செய்யக்கூடாது, என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனு: என் மீது மேலூர், கீழவளவு, மேலவளவு, ஒத்தக்கடை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் 33 வழக்குகள் பதிவு செய்தனர். 15 வழக்குகளில் என்னை போலீசார் கைது செய்தனர். ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது. முன்ஜாமின் மனுக்கள் நிலுவையில் உள்ளன. எனக்கு எதிராக, போலீசாருக்கு மேலும் பல புகார்கள் வந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. உள்நோக்குடன் பல பிரிவுகளில், வழக்குப் பதிந்து, கைது செய்ய வாய்ப்புள்ளது. என் மீது, இனி ஏதாவது வழக்குப் பதிவு செய்யும்பட்சத்தில், கைது செய்ய தடை விதித்து, முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி சி.டி.செல்வம் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், ""இக்கோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது,''என்றார். பழனிச்சாமி, செல்வம், பாபு, சந்திரா, ராஜாத்தி, சண்முகவேல் உட்பட பல்வேறு முன்ஜாமின் மனுக்கள் மற்றும் ஜாமின் (1) மனு நிலுவையில் உள்ளவர்களை, 2013 ஜன.,21 வரை கைது செய்யக்கூடாது, என நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.