சிவகங்கை: பி.எட்., ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு 2ம் இடம் ஒதுக்கியதால், தமிழ் பாட ஆசிரியர்கள் நியமனம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில், அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 360 மாணவர்களுக்கு, ஒரு கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அறிவியல், ஆங்கிலம், கணிதம், சமூகஅறிவியல், தமிழ் என்ற வரிசைப்படி, பி.எட்., ஆசிரியர்களை நியமித்தனர். இந்த நடைமுறைக்கு, தமிழாசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டி.இ.டி.,தேர்வில், 360 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை
நியமிக்கும் வரிசையில், இரண்டாவது தமிழ் பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கலாம் என, அரசு உத்தரவிட்டது. 2வது இடத்தில் இருந்த ஆங்கில பாடம் கடைசி நிலைக்கு சென்றது.
தமிழ்ஆசிரியர் கழக மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில்,"" அரசின் இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது, என்றார்.