Attempt to smuggle ration rice for kerala | கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்: விருதுநகர் அருகே, கேரளாவிற்கு கடத்த முயன்ற, 65 மூடை ரேஷன் அரிசியை, உணவு கடத்தல் பிரிவினர் பறிமுதல் செய்து, ஆறு பேரை கைது செய்தனர். விருதுநகர்- கள்ளிக்குடி நான்குவழி சாலையில், உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். "பல்சர்' டூவிலரில் வந்த, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரைஸ்மில் உரிமையாளர் மணிகண்டனை, 37, விசாரித்தனர். அவரது தகவல்படி, கள்ளிக்குடி குடோனில் பதுக்கி வைத்திருந்த 31 மூடை, தோப்பூர் பழைய இரும்புக்கடை கணேசனிடமிருந்து, 34 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இவர்களுடன், துணையாக இருந்த காரைக்குடி பாலு, ராஜேஷ்குமார், வைரவன், ராஜேந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை