கராச்சி:பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்ற, ஐந்து பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், கடந்த ஆண்டு, அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய டாக்டர், ஷகில் அப்ரிடி என்பவர், போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போல சென்று, அபோதாபாத்தில், ஒசாமா தங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தார்.
இதனால், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை எதிர்க்கின்றன.இதற்கிடையே, பாகிஸ்தானில் நேற்று, பல்வேறு பகுதிகளில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. கராச்சியில், குல்ஷன்-இ-புனிர், ஓரஞ்சி ஆகிய இடங்களில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்ற, மூன்று பெண்கள் உள்பட, ஐந்து பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உலக சுகாதார நிறுவனம், போலியோ சொட்டு மருந்து விநியோகத்தை, உடனடியாக நிறுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.