ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு பெய்ய வேண்டிய மழை ஏமாற்றியதால், 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகியுள்ளது. 105 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடனை, ஆர்.எஸ்., மங்கலம் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் நடப்பாண்டு 1.28 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழையின்றி கண்மாய்கள் வறண்டு வருகின்றன. தண்ணீர் இன்றி நெற்பயிர் கருகி வருகிறது. பயிரை எப்படி காப்பாற்றப்போகிறோம் என தெரியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி, மகசூலை எட்டியுள்ள பயிரை காப்பாற்றும் முயற்சியும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. விவசாயிகளின் பரிதாப நிலையை உணர்ந்த வேளாண் அதிகாரிகள், மாவட்டத்தில் டிச.,12ம் தேதி வரை நடத்திய கணக்கெடுப்பில், 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் கருகிப்போனது தெரியவந்தது. இதேநிலை நீடித்தால், ஒரு லட்சத்து 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் முழுவதும் சாவியாகிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பெரியகண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், பாலசுந்தரமூர்த்தி கூறியதாவது: 10 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கண்மாய்களில் உள்ளது. இது விவசாயத்திற்கு போதாது. வைகை தண்ணீரும் வரவில்லை. மழை பெய்ததால் தான் மகசூல் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற முடியும், என்றார்.
ராமநாதபுரம் வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில் 206 மி.மீ., மழைக்கு, 304 மி.மீ., பெய்தது. நடப்பாண்டு நவம்பரில், 56 மி.மீ., மட்டுமே பெய்தது. டிசம்பரில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. பெரும்பாலான விவசாயிகள் அக்டோபரில் பெய்த மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டனர்.
ஒரு எக்டேருக்கு 5,119 கிலோ நெல் மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டால் 1,350 ரூபாய் வரை விலைபோகும். மழை பொய்த்து 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் கருகியதால், விவசாயிகளுக்கு 105 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2011ல், இம்மாவட்டத்தில் 6 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் நடப்பாண்டு, கால்வாசி கூட தேறுமா என்பது சந்தேகமே, '' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.