Advertisement
சூரியசக்தி மூலம் 3,000 மெகாவாட் உற்பத்தி: பொறியாளர் பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:26 IST

காரைக்குடி: வரும் 2015 க்குள், சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளதாக, காரைக்குடியில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நல்லம்மாள் பேசினார்.

மின்சிக்கன வார விழாவில், அவர் பேசியதாவது; மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளதால், மின்வெட்டு செய்யவேண்டியுள்ளது. நமக்கு, 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. இதில், மே முதல் செப்டம்பர் வரை மட்டும், காற்றாலை மூலம் 3,500 மெகாவாட் கிடைக்கிறது. மற்ற நேரங்களில், இவை கிடைக்காது. மின் அதிர்வெண் (ப்ரிக்யுவன்சி) 49.7 முதல் 50.2 வரை உள்ளது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்தால், அதிர்வெண் அதிகரிக்கும். அப்போது, கட்டாயம் மின்தடை செய்யவேண்டும். இல்லாவிடில், மின் பாதைகள் பழுதாகும். மின்சிக்கன விதிமுறைகளை பின்பற்றினால், 4,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். குழல் விளக்குகளை விட, சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தினால், நான்கு மடங்கு மின்சாரம் சேமிக்கலாம். நாளுக்கு 248 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படும், தமிழகத்தில், 2.40 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். நாளுக்கு நாள் மின்தேவை அதிகரிக்கிறது. நாடு வெப்ப மயமாகி வருவதால், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளோம். சூரிய சக்தி மூலம் வரும் 2015 க்குள், 3,000 மொகாவாட் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். சிவகங்கையில், சூரியசக்தி மூலம், நடப்பாண்டு, 25 மெகாவாட் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது, என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201209:55:42 IST Report Abuse
Guru தயவுசெய்து பேச்சை குறைத்து செயலில் நிருபியிங்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Loganathan - Madurai,இந்தியா
19-டிச-201202:15:32 IST Report Abuse
Loganathan பல ஆண்டுகளுக்கு முன் மின் தடை காலங்களில் தெரு விளக்குகள் ஒன்று விட்டு ஒன்று எரியும். இதன் மூலம் 50 சதவிகிதம் மின்சாரம் குறைக்கப்பட்டது . இப்பொழுது அந்த முறை செயல் படுத்துவதில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.