மதுரை :வரத்து கால்வாய்கள் அடைப்பு, ஆக்கிரமிப்பு, பராமரிப்பு இன்மை, கிரானைட் குவாரிகள் போன்ற பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் 1.60 லட்சம் கண்மாய்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. கண்மாய்களை தூர்வார புறப்பட்ட பொதுப்பணித்துறையினர், கண்மாய்களை காணாததை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.
கிராமங்களில் கண்மாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆண்டு தோறும் கண்மாய்களை தூர்வாரி, சுத்தம் செய்து, கரைகளை உயர்த்தி, நீர் வரத்து கால்வாய்களை பராமரித்து வந்தனர். இதனால், மழைக்காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, கோடை காலத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். பின், கண்மாய்களை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட கண்மாய்கள்: கிரானைட் குவாரிகள் வருகை, நான்கு வழிச்சாலைக்கு மண் எடுத்தல், சீமை கருவேல மரங்களை வளர்த்தல், பராமரிப்பு இல்லாத வரத்துக்கால்வாய்கள், கிரானைட் குவாரிகள், ஆக்கிரமிப்பு, விவசாயம் செய்தல், மீன் பிடிப்பதற்காக கண்மாய் தண்ணீரை திறந்து வீணடிப்பது உள்ளிட்ட காரணங்களால் கண்மாய்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன. இவர்களது கைங்கரியத்தால் கண்மாய்களை பராமரிக்க வழியில்லாமல் பொட்டல் காடானது. இதனால், விவசாயத்திற்கு வழியின்றி போனது.
1.60 லட்சம் கண்மாய் மாயம்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 4.30 லட்சம் கண்மாய்களை தூர்வாரி, தண்ணீரை சேமிக்கும்படி, பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. டெண்டர் ஒதுக்குவதில் கிடைக்கும் "கட்டிங்' ஆசையால், பொதுப்பணித்துறையினர் குழு அமைத்து, கண்மாய்களை தூர்வார மண் அள்ளும் இயந்திரத்துடன் புறப்பட்டனர். ஆனால், இக்குழு தேடிச் சென்ற பல கண்மாய்கள் இருந்த சுவடு கூட தெரியவில்லை.
அதிர்ச்சியில் அதிகாரிகள்: மாநில அளவில் கண்மாய்களை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டிய பொதுப்பணித்துறையினர், தற்போது 1.60 லட்சம் கண்மாய்களை காணாததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கையில் வெண்ணெய்யை வைத்து கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தூர்வார கண்மாய்களை கிடைக்காமல் திக்குமுக்காடி வருகின்றனர். இதனால், வருவாய் துறை உதவியுடன், கண்மாய்களை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.