கலப்பு உரம் தயாரித்து "கொள்ளை லாபம்' சம்பாதிக்கும் நிறுவனங்கள் : விவசாயிகளுக்கு எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை : ரசாயன உரங்களுடன் ஜிப்சத்தை கலந்து, கலப்பு உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளிடம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. விவசாயத்தில் பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அவசியம் தேவை. ஒவ்வொரு பயிருக்கும், இவற்றிற்கான தேவை விகிதாச்சாரம் மாறுபடும். பயிர்களுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உரங்களை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த உரங்களை, மூன்று சத்துக்களின் விகிதாச்சாரப்படி கலந்து பயிர்களுக்கு இடுவது குறித்து விவசாயிகள் அறிந்திருப்பதில்லை. எனவே நெல், கரும்பு என ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ப, கலப்பு உரம் தயாரிக்க, நிறுவனங்களுக்கு 1970ல் அனுமதி வழங்கப்பட்டது. பல பெரிய நிறுவனங்கள் இதில் இறங்கின. பின், சிறிய தனியார் நிறுவனங்கள் பல புற்றீசலாக கிளம்பின. வரைமுறையின்றி செயல்பட்டதால், அவற்றை கட்டுப்படுத்த, 2001க்கு பின் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிறுவனங்களில் சில, விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி, கலப்பு உரங்களின் பெயரில் பெருமளவு லாபம் சம்பாதிக்கின்றன. உதாரணமாக ஒரு கிலோ யூரியா உரத்துடன், 49 கிலோ அளவிற்கு ஜிப்சத்தை சேர்த்து, 50 கிலோ மூடையை ரூ. 200 வரை விற்பனை செய்கின்றன. இதில் ஜிப்சம் உப்பளங்களில் இருந்து கிடைக்கும் மணல்தான். யூரியா உரநிறுவனங்களில் கழிவுப் பொருளாக வெளியேற்றப்படும் அவற்றை, கலப்பு உரம் தயாரிக்கும் சில சாதாரண நிறுவனங்கள், கிலோ 50 காசு என்ற ரீதியில் அள்ளி வருகின்றன. அவற்றை யூரியா அல்லது பொட்டாஷ் உரத்துடன் இஷ்டத்திற்கு கலந்து விற்கின்றன. இவற்றால் பயிர்களுக்கு எந்த பலனும் கிடையாது. அதேசமயம் "ஜிப்சம்' மணலால் பாதிப்பும் வராது. பயிர்களுக்கு ஏற்ற, சத்துக்களின் விகிதாச்சார கலவையை, விவசாயிகள் அறிந்தால் போதும். அவர்களே தேவையான உரங்களை கடைகளில் வாங்கி, ஒன்றுடன் ஒன்றை கலந்து கலப்பு உரம் தயாரிக்கலாம்; அல்லது மதுரை ஒத்தக்கடையில் உள்ள விவசாய கல்லூரியில் உள்ள மண்ணியல் துறையை அணுகினால் கலப்பு உரம் தயாரிக்கும் விபரம் விவசாயிகளுக்கு கிடைக்கும். இங்கு ஆலோசனை பெற்றால், பயிர்களுக்கு தேவையான "சத்துக்களை' பரிந்துரைப்பர். மண்மாதிரி எடுத்துச் சென்றால், நிலத்திற்கேற்ப ஆலோசனை வழங்குவர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்