விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் புதுக்கோட்டையில், நெல், பருத்தி, மக்காச்சோள பயிர்கள், தண்ணீரின்றி கருகியதால், மனமுடைந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இங்குள்ள எரிச்சநத்தம் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி பாண்டி, 29. இவரது மனைவி அழகுசெல்வி, 25. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
பாண்டி தனது நான்கு ஏக்கர் நிலத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இதற்காக, இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்திருந்தார். மழை பொய்த்ததாலும், நாள் முழுவதும் ஏற்படும் மின்தடையால், மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாததாலும், பயிர்கள் தண்ணீரின்றி கருகின. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டனர். மனமுடைந்த பாண்டி, நேற்று முன்தினம் இரவு, பயிர்களுக்கு அடிக்கப்படும் விஷ மருந்தை குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார். எம். புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஊராட்சி தலைவர் சந்திரன் ,"" பாண்டி, கடந்த ஞாயிறன்று, நிலத்தை சுற்றிப்பார்த்துவிட்டு, "கடன் வாங்கி விவசாயம் செய்த பயிர்கள் கருகி விட்டதே, என்ற மன வேதனையில், விஷ மருந்தை குடித்து இறந்து விட்டார்,''என்றார். டி.ஆர்.ஓ., ராஜூ ,""அரசியல் கட்சிகள் தான் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றன. இறந்த விவசாயி பெயரில், நிலமோ பட்டாவோ, கிடையாது. வீட்டில் நான்கு நாட்களாக நடந்த சண்டையில் கோபமடைந்து, விஷம் குடித்துள்ளார். நெல் பயிர் காப்பீடுக்கு, 2013 ஜன., 15 வரை காலக்கெடு உள்ளது. மற்ற பயிர்களுக்கு காப்பீடு முடிந்திருந்தாலும் கூட, கால நீட்டிப்பு கேட்டுள்ளோம். இருந்தாலும், இறந்த விவசாயி குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.