தேனி : தேனியில், 32 ஆண்டுகளாக உள்ள ரோட்டை மேம்படுத்துவது தொடர்பான பணிகளில், நெடுஞ்சாலை மற்றும் நிலஅளவை துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி- மதுரை ரோடு ரயில்வே கிராசிங் அருகில் இருந்து, பெரியகுளம் ரோட்டை இணைக்கும் வகையில், 32 ஆண்டுகளுக்கு முன், 4 கி.மீ., க்கு, ரோடு அமைக்கப்பட்டது. தற்போது, இந்த ரோடு அருகே பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, பைபாஸ் ரோட்டில் மாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக, சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், இந்த ரோட்டை மேம்படுத்த டெண்டர் விடப்பட உள்ளது. வழக்கு, டெண்டர் விபரங்களுக்காக, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் லதா தலைமையில் அதிகாரிகள், நேற்று, ரோடுக்கான நிலத்தை அளந்தனர். இந்த இடத்தில், சிலர் வேலி அமைத்துள்ளனர். இதை அகற்றி நிலத்தை எடுப்பது குறித்து, நிலஅளவைத்துறை அதிகாரிகள் முருகன், செல்வராஜிடம், பொறியாளர் விளக்கம் கேட்டார்.
"நெடுஞ்சாலைத்துறை ரோடுக்கு உரிய வரைபடமே எங்களிடம் இல்லை' என, பதில் அளித்தனர். ""எங்கள் ரோடுக்கான 85 அடி நிலம் எங்கே?' என, லதா கேள்வி எழுப்பினார். "உங்களுக்கு இங்கு ரோடே இல்லை. நிலம் கேட்டால் எப்படி?' என, நிலஅளவை அதிகாரிகள் கூறினர். இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூடுவதை கவனித்த அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.