மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 38 அடியாக சரிந்ததால், வரும் ஆண்டிலும் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ம் தேதி பாசனத்துக்கு நீர் திறந்தால், டெல்டா மாவட்டங்களில், 16.5 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பயிர் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு குறுவைக்கு நீர் திறக்காததால் டெல்டாவில், 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. இதன் மூலம், 1,500 கோடி ரூபாய் நெல் உற்பத்தி பாதித்தது. மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர், 17ம் தேதி நீர் திறந்தால், 10.12 லட்சம் ஏக்கரில், விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். சம்பா சாகுபடிக்காக செப்டம்பர், 17 முதல் ஜனவரி, 28 வரை, 131 நாட்கள் நீர் திறக்க வேண்டும். ஆனால், அணை நீர்மட்டம் குறைந்ததால் கடந்த, 27ம் தேதி டெல்டா பாசன நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா நீர் திறந்ததால் கடந்த, 5ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து, மீண்டும் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு, 11,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், 5ம் தேதி, 50 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 38 அடியாக குறைந்தது. அணையில், 11 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இந்த நீரைக்கொண்டு, இன்னும் ஒரு சில நாட்களே பாசனத்துக்கு திறக்க முடியும் என்பதால், கடைசி கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா சாகுபடி பாதித்துள்ளது. வரும் ஆண்டு, ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டுமானால், மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தபட்சம், 52 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருக்க வேண்டும். ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழையால் மட்டுமே மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.
ஜூன் மாதம் நீர்வரத்து அதிகரித்தாலும் கூட, வறண்டு காணப்படும் மேட்டூர் அணைக்கு, 50 டி.எம்.சி.,நீர் கிடைக்க மேலும் ஒரு மாதமாகும். இதனால், தாமதமாக நீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், வரும் ஆண்டிலும் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படுட்டுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம்
நீர்மட்டம் : 39.540 அடி
நீர் இருப்பு : 11.854 டி.எம்.சி.,
நீர்வரத்து : 1,018 கனஅடி
திறப்பு : 11,500 கனஅடி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.