தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, மகளின் தவறான நடத்தையால் ஆத்திரமடைந்த தந்தை, அவரது கழுத்தை நெரித்துக்கொலை செய்து, போலீசில் சரணடைந்தார். திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், ஜெ.ஜெ.,நகர், முடிதிருத்தும் தொழிலாளி அலெக்ஸ்,37. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 மகள்கள், 1 மகன் இருந்தனர். 9 ம்வகுப்பு படிக்கும் மூத்தமகள் பபிதா,14, டிச.,16ம் தேதி, உறவினருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த சில உறவினர்கள், அலெக்ஸிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர். தன் மகளின் தவறான நடத்தையால் , ஆத்திரமடைந்த அவர், நேற்று காலை 10 மணியளவில், வீட்டில் வைத்து பபிதாவை, கழுத்தை நெரித்துக்கொலை செய்தார். பின்னர், அலெக்ஸ், மெஞ்ஞானபுரம் போலீசில் சரணடைந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.