மதுரை : மதுரை மாவட்டத்தில், விதிமீறி செயல்பட்ட, 50 கிரானைட் குவாரிகளின் உரிமம், ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், 175 கிரானைட் குவாரிகள் உள்ளன. குவாரிகளின் விதி மீறிய செயலால், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில், 85 குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளன என, கண்டறியப்பட்டது. கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில், அதிகாரிகள், கிரானைட் கற்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தினர். முதற்கட்டமாக, 1.75 லட்சம் கற்கள் அளவீடு செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 4,000 கோடி ரூபாய் என, அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பின், கற்களின் அளவீடு பணி முடிந்து, கிரானைட் கற்களால் அரசுக்கு வர வேண்டிய தொகையை, மதிப்பீடு செய்தனர். மேலும், குவாரிகளின் விதிமீறல்களால் ஏற்பட்ட இழப்பு குறித்து, கணக்கெடுக்கப்பட்டது. 52 குவாரிகளால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக, சமீபத்தில், அறிக்கை அளிக்கப்பட்டது. இது குறித்து, மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. விதிமீறிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கலெக்டர், அரசுக்கு பரிந்துரைத்தார். பி.ஆர்.பி., சிந்து, மதுரா, குமார் கிரானைட்கள் உள்ளிட்ட, 16 குவாரி நிறுவனங்கள் மீது, தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதனடிப்படையில், அந்நிறுவனங்களின், 50 குவாரிகளுக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவற்றிற்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விளக்கம், அரசுக்கு திருப்தி தராத பட்சத்தில், அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.