ஊட்டி : ஊட்டியில் நிலவும் காலநிலை மாற்றத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில், நவ., மற்றும் டிச., மாதங்களில், பனிப்பொழிவு நிலவும். துவக்கத்தில், பனியின் தாக்கம் அதிகரித்து, மெல்ல, மெல்ல குறைந்து, தற்போது, காற்றுடன் கூடிய கடுங்குளிர் நிலவுகிறது. சில நாட்களாக, அதிகபட்சம், 21 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாக இருந்தது. நேற்று, அதிகபட்சம், 18, குறைந்தபட்சம், 6.5 டிகிரியாக குறைந்தது. "வங்கக் கடலில், புயல் சின்னம், கடல் கொந்தளிப்பு போன்றவை நிகழும் போது, ஊட்டியில், இத்தகைய மாற்றங்களை உணர முடியும்' என, வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். காலநிலை மாற்றதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில், பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.