Advertisement
வேளாண்மை மையங்களில் வீணாகும் "கோணாவீடர்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:32 IST

காஞ்சிபுரம் : விவசாயிகளுக்கு வழங்க உள்ள, களை எடுக்கும் கருவி "கோணாவீடர்' சிறுகாவேரிபாக்கம் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், துருபிடித்து வீணாகி வருகிறது.திருந்திய நெல் சாகுபடிக்கு தேவையான ஐந்து கிலோ விதை, யூரியா ஆகியவற்றை, வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வாங்கி செல்லும் விவசாயிகளுக்கு, களை எடுக்கும் கருவியான "கோணாவீடர்' மற்றும் நாற்றுக்களை வரிசையாக நட அளவிடும் கருவி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.இதற்காக, வேளாண்மை விரிவாக்க மையங்களில் இவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறுகாவேரிபாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், 200க்கும் மேற்பட்ட களை எடுக்கும் கருவி "கோணாவீடர்' ஐந்து மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்கப்படாமல், துருபிடித்து வருகின்றன. இதே நிலை தான் பெரும்பாலான மையங்களில் காணப்படுகிறது. வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""களை எடுக்கும் கருவி கோணாவீடரை, உடனடியாக எடுத்து செல்லும்படி கூறுகிறோம். அதற்கு அவர்கள், ஒரே நேரத்தில் எடுத்து செல்வதாக கூறிவிட்டு, சென்றுவிடுகின்றனர். இம்மாத இறுதிக்குள் அவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:01:32 IST Report Abuse
தமிழவேல் // வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""களை எடுக்கும் கருவி கோணாவீடரை, உடனடியாக எடுத்து செல்லும்படி கூறுகிறோம். அதற்கு அவர்கள், ஒரே நேரத்தில் எடுத்து செல்வதாக கூறிவிட்டு, சென்றுவிடுகின்றனர். இம்மாத இறுதிக்குள் அவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். // அவரது பதில் நம்பும்படி இல்லை ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Regunathan Rengaiyan - chennai,இந்தியா
19-டிச-201211:40:20 IST Report Abuse
Regunathan Rengaiyan உண்மை விவசாயிகள் கோனா வீடரின் பயன்பாடு பற்றி இன்னமும் அறியாதவர்களாக இருக்கின்றாகள். மேலும் திருந்திய நெல் சாகுபடியினை முறைப்படி யாரும் செய்வதில்லை வேளாண்மை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இத்திட்டத்தினை செயல் படுத்துவதில் விவசாயிகளுக்கு ஏராளமான நடைமுறை சிக்கல் உள்ளது இதனை தீர்க்க எந்த ஒரு வேளாண்மை விஞ்சானியும் ஆர்வம் காட்டுவதில்லை அரைத்த மாவையே அரைத்துகொண்டிருக்கின்றார்கள் . பின் எவ்வாறு கோனா வீடர் விவசாயிகளிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:02:39 IST Report Abuse
தமிழவேல் அப்படி என்றால் விதைகளை வாங்கிகொண்டுபோய் கோழிகளுக்கு போடுகின்றார்களோ ?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.