சென்னை :விலைவாசி உயர்வை கண்டித்தும், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை எதிர்த்தும், தொழிற்சங்கங்கள் சார்பில், சென்னை சென்ட்ரலில், நடந்த ரயில் மறியலில், 930 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு, ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - எல்.பி.எப்., உட்பட எட்டு தொழிற் சங்கத்தினர், எம்.எல்.ஏ., சவுந்தர்ராஜன் தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும், திடீரென சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கு, 11:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்த, மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முன், மறியல் செய்ய முயன்றனர். சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சென்னை மாநகர போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். மறியலில் ஈடுபட்ட, 930 பேர் கைது செய்யப்பட்டு, கொண்டித்தோப்பில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மறியலால், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மங்களூர் வெஸ்ட் கோஸ் எக்ஸ்பிரஸ், உரிய நேரமான காலை, 11:30 மணிக்கு புறபட்டு சென்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.