Devotees suffered in pazhani | பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் : அடிப்படை வசதிகள் இன்றி அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் : அடிப்படை வசதிகள் இன்றி அவதி

Added : டிச 19, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் : அடிப்படை வசதிகள் இன்றி அவதி

பழநி : பழநியில் ஐயப்பன் பக்தர் சீசனை தொடர்ந்து, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநி கோயிலுக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி என்பதால் அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம்.

பிரச்னைகள்: பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி மிகவும் குறைவு. சரவணப்பொய்கையில் "இலவச கட்டணம்' என போர்டு இல்லாததால், பக்தர்களிடம், குளிப்பதற்கு ரூ.5 முதல் 10 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்.
* மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திருஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல ரூ.500 முதல் 1000 வரை இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். "வேண்டாம்' என்றால், பக்தர்களை கடுமையான வார்த்தைகளால் "அர்ச்சனை" செய்கின்றனர்.
* தேங்காய், பழங்களை கூடுதலாக விலைக்கு விற்கின்றனர்.
* அடிவாரம், சன்னதி வீதி, திருஆவினன்குடி கோயில் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்கள் இந்த ரோட்டில் நடப்பதே சிரமமாக உள்ளன.
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நகராட்சி,தேவஸ்தானத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.JOTHIGANESAN - lekhwair,ஓமன்
20-டிச-201200:10:49 IST Report Abuse
V.JOTHIGANESAN ராஜ் ராஜ் இந்த செய்தி முற்றிலும் உண்மை நான் பழனியிலும் ராமேஸ்வரத்திலும் இந்த கொடுமைல அனுபவிப்பவர்களை நேரில் பல வருடங்களாக பார்த்து இருக்கிறேன் தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன்,ஆனைனமலை மாசானியம்மன் கோவிலும் இதேபோல் மாறி வருகின்றன. இதற்கு ஒரே வழி பழனி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஆனைமலை போகாமல் வீட்டி‌லேயே இறைவனை கும்பிடுவது சாலச்சிறந்தது, கொள்ளை அடிக்க நாம்தானே இதை செய்கிறோம்.திருடனை தூண்டிவிடுவது பக்தர்கள ஆகிய நாம் தானே.எந்த கோவிலுக்கும் ஒரு வருடத்திருக்கு போகாமல் இருந்து வாருங்கள் ஊழியர்கள் தவிர எந்த சோம்பேறிகளும் இருக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raj Raj - salem,இந்தியா
19-டிச-201212:19:29 IST Report Abuse
Raj Raj பழனி மலை ஆண்டவனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்... இந்த செய்தி கூற்று முற்றிலும் உண்மை. எனவே நீங்கள் ஆண்டவனை தரிசிக்க வேண்டுமானால் டிக்கெட் கூட எடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. ஒரு 500 ரூபாய் டிக்கெட் கவுன்டரில் உள்ள யாராவது ஒரு ஊழியரிடம் கொடுத்தால் உடனடியாக காரியம் நடக்கும். இல்லையென்றால் இலவச தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு நான் நேர்மையானவன் இதை தட்டிகேட்பேன் என்று நீங்கள் டிக்கெட் அலுவலகத்திற்கு சென்று ஏதும் கேட்டால் அங்கு அலுவலக ஊழியர் என்ற போர்வையில் உள்ள ரௌடிகளால் தாக்கப்படுவீர்கள். மேலும் போலீஸ் அல்லது தேவஸ்தான அலுவலகத்தில் முறையிட்டாலும் ஒன்றும் நடக்காது ( ஏனெனில் இது எனக்கு நேர்ந்த சொந்த அனுபவம்.... நான் மாவட்ட ஆட்சியர் வரை புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லை.) அனைவருக்கும் ஒரு பங்கு போய்விடும் போல... பழனி மலை முருகன் இப்போது டிக்கெட் கவுன்ட்டர் ரௌடிகளின் கஸ்டடியில் உள்ளார். எனவே பணம் இருந்தால் பழனி சென்று முருகனை பாருங்கள் இல்லை நீங்கள் ஆண்டி என்றால் வீட்டில் இருந்தே கும்பிட்டுகொல்லுங்கள். மதுரையில் granite கொள்ளை போல இங்கு ஆண்டவனையே சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு மெகா திருட்டு கும்பல் உள்ளது. இதை தட்டிகேட்க எந்த அலுவலருக்கு நேர்மை இருக்குது சொல்லுங்க பார்க்கலாம்.( நான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் புகார் கொடுத்ததும் ஒரு நேர்மையான அதிகாரியை காண முடியவில்லை) யாராவது நேர்மையான(?) அரசு தலைமையில் ஆண்டவன் இந்த ரவுடி மற்றும் கொள்ளை கும்பலில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை