Advertisement
அவதூறு வழக்கு தொடர அரசு அனுமதி : எதிர்ப்பு தெரிவித்த விஜயகாந்த் மனு தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2012
00:39

சென்னை : அவதூறு வழக்கு தொடர, தமிழக அரசு அனுமதியளித்ததை எதிர்த்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தேனியில், இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக் கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியது தொடர்பாக, செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்கை, தமிழக அரசு தாக்கல் செய்தது. இதற்கான அனுமதியை, கடந்த மாதம், 22ம் தேதி, தமிழக அரசு வழங்கியது.
புகார் மனுவில், "தமிழகத்தை, முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என, ஜெயலலிதா கூறுகிறார். வறுமையில், ஊழலில், கொள்ளையடிப்பதில், வேலையில்லாததில், லஞ்சம் வாங்கி, போலீசார் கொள்ளையடிப்பதில், ரவுடியாக போலீசார் மாறுவதில், முதன்மை மாநிலமாக ஆக்குவார்' என, கூறப்பட்டுள்ளது. அவதூறு வழக்கு தொடர, அரசு அனுமதியளித்ததை எதிர்த்து, ஐகோர்ட்டில், விஜயகாந்த், தாக்கல் செய்த மனுவில், "நல்ல நோக்கத்தில், எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையில், அரசை விமர்சித்தேன். இதில், உள்நோக்கம் இல்லை. எனவே, அவதூறு வழக்கு தொடர அனுமதித்து, கடந்த மாதம், 22ம் தேதி, பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி என்.பால்வசந்த குமார் விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூடுதல் அரசு பிளீடர் ராஜா, ஆஜராகினர்.

நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: அரசாணையில், புகாரில், குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளைப் பார்க்கும் போது , விஜயகாந்த் மீது, அவதூறு வழக்கு தொடர, ஆரம்ப முகாந்திரம் இருப்பதை காட்டுகிறது. அந்த வார்த்தைகளை, விஜயகாந்த் பயன்படுத்தினாரா, முதல்வரின் புகழை குலைக்கும் விதத்தில் உள்ளனவா, கெட்ட நோக்கம் உள்ளதா, என்பதெல்லாம், கோர்ட்டில் நிரூபிக்கப்பட வேண்டும். வழக்கு தொடர அனுமதியளிக்க, ஆரம்ப முகாந்திரம் இருப்பதாலும், தேனி, முதன்மை மாவட்ட கோர்ட்டில், புகார் நிலுவையில் இருப்பதாலும், அரசாணையிலோ, புகாரிலோ குறுக்கிடுவதற்கு, முகாந்திரம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில், விஜயகாந்த் பேசியதற்கு, அவதூறு வழக்கு தொடர, அனுமதியளித்ததை எதிர்த்தும், ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், அரசாணைக்கு தடை விதித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.