சென்னை: இந்தியா - பாகிஸ்தான், கிரிக்கெட் போட்டிக்காக, எம்.ஏ.சி., மைதானத்தில், மூன்று காலரிகளை பயன்படுத்திக் கொள்ள, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு, சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. சென்னையில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், "ஐ', "ஜே', "கே' என, பார்வையாளர்கள் அமர்வதற்கான காலரி, கட்டப்பட்டது. "இதற்கு அனுமதி பெறவில்லை; அதை இடிக்க வேண்டும்' என, சென்னை மாநகராட்சி தரப்பில், "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், நிபந்தனைகளுடன் கூடிய இடைக்காலத் தடையை, இந்த ஆண்டு, மே மாதம், 24ம் தேதி, விதித்தது. இதையடுத்து, மே, 25, 27ம் தேதிகளில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நடந்தது. இம்மாதம், 30ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, எம்.ஏ.சி., மைதானத்தில் நடக்க உள்ளது.
மூன்று காலரிகளையும் பயன்படுத்துவதில், குறுக்கீடு செய்யக் கூடாது எனக் கோரி, ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கிரிக்கெட் சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு தரப்பில், அரசு பிளீடர் வெங்கடேஷ், சி.எம்.டி.ஏ., சார்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் பாரதிதாசன் ஆஜராகினர். மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: விளையாட்டு அரங்கத்துக்குள்ளும், வெளியேயும், பார்க்கிங் வசதி போதுமானதாக உள்ளது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை, "மல்டி லெவல் பார்க்கிங்' கட்ட வேண்டும் என்கிற நிபந்தனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள, "ஐ', "ஜே', "கே' என, மூன்று காலரிகளையும், பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த மூன்று காலரிகளையும் பயன்படுத்த, அனுமதி மறுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனரின் நிபந்தனைக்கு தடை விதிக்கப்படுகிறது. போட்டியின் போது, வாகனங்கள் பார்க்கிங்கை ஒழுங்குபடுத்த, கூடுதல் கமிஷனர், நிபந்தனைகளை விதிக்க உரிமையுள்ளது. அந்த நிபந்தனைகளை, கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். போட்டியின் முக்கியத்துவம் கருதியும், போட்டியை காண வரும் ஏராளமான ரசிகர்களை கருதியும், இந்த அனுமதியை வழங்குகிறோம். இம்மாதம், 30ம் தேதி நடக்கும் போட்டிக்கு மட்டுமே, இந்த அனுமதி பொருந்தும். இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.